பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

கமுதி

அரசுப் பேருந்து ஒன்றில்...

“பெரியவரைப் பார்த்தா... காங்கிரஸ்காரர் மாதிரி தெரியுது. பாவம்! யாராச்சும் அவருக்கு உட்கார சீட் குடுங்கப்பா!”

“கண்டக்டர் சார்... அவருக்கு சீட்டுக் குடுத்தா, ஜெயிப்பாரான்னு கேளுங்க... நா கொடுக்கேன்!”

(பஸ்ஸில் உள்ளவர்கள் சிரிக்க... பெரியவர் முறைக்கிறார்)

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

திருவாரூர்

டூ வீலர் பஞ்சர் கடை ஒன்றில்...

“என்ன சார், சைக்கிள்ல வர்றீங்க... உங்க பைக் என்னாச்சு?”

“எலெக்‌ஷன் எல்லாம் முடிஞ்சிடுச்சு. எப்ப பெட்ரோல் விலையேறும்னே தெரியல... அதுக்கு முன்னாடியே நாம ரெடியா இருக்கணும்ல!”

“சரக்கு விலையும்தான் ஏறிடுச்சு. அதுக்காக யாரும் பச்சத் தண்ணியா குடிக்கிறாங்க?!"

(சைக்கிள் பார்ட்டி சைலன்ட் ஆகிறார்!)


-சு‌.மூன்சுதாகரன்,

வானவன்மகாதேவி

தஞ்சாவூர்

திருச்சி செல்லும் பேருந்தில்...

“என்னங்க... பை-பாஸ் ரைடர்னீங்க. வண்டி எல்லா இடமும் நின்னு உள்ளே எல்லாம் போயிட்டு வருதே?!"

“என்ன பண்றது சார்... பையை பாஸ் பண்றப்ப, வசூல் இல்லேன்னு கடிக்கிறாங்களே! "

“அப்ப, ஆல்-பாஸ் ரைடர்னு போர்டை வைங்க. நாங்களும் அல்லாட மாட்டோம்ல!”

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்,

தஞ்சாவூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in