பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...
ஓவியம்: முத்து

சென்னை

ராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருவர்...

“புலிப் பாய்ச்சலா கரோனா எகிறினாலும் பலி எண்ணிக்கை கம்மியா இருக்குதுல்ல மச்சி... இப்ப வர்ற கரோனாவுக்கு வீரியம் கம்மி போல?”

“கரோனாவைவிட தடுப்பூசி வீரியம் ஜாஸ்திங்கிறதாலதான் டெத் ரேட் கம்மி. அதனால நீயும் சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கோ. நியூஸ் படிச்சா மட்டும் பத்தாது. ஃபாலோ பண்ணணும் மச்சி!”

- எ.எம்.முகமது ரிஸ்வான்,

சென்னை

கமுதி

ரேஷன் கடை வரிசையில் நிற்கும் பெண்கள்...

“எதுக்குப் பொங்கல் பை கொடுக்க இவ்ளோ லேட் பண்றாங்க? மடமடன்னு பொருளைப் பையில போட்டுக் கொடுக்க வேண்டியதுதானே?”

“பொருள் மட்டும்தான்னா உடனே எடுத்துக் கொடுத்திடலாம். பணத்தை எண்ணித்தானே கொடுக்கணும்?! அதான் லேட்டாகுது போல...”

(மூன்றாவது பெண்) “என்னடீ சொல்றீங்க... பணமுமா கொடுக்குறாங்க?”

“அட நீங்க வேற... இவ ரெட்டலக் கட்சி. சும்மா நக்கல் பண்றாக்கா!”

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புளி

தஞ்சாவூர்

ரேஷன் கடை அருகே இருவர்...

“என்ன மாப்ள இது? 21 பொருள்னாங்க... எண்ணினா இருபதுதான் வருது?”

“பையைக் கணக்குலே சேர்த்தியா?!”

“பையையுமா பொங்கல்ல சேர்ப்பாங்க? நல்ல ஆளுய்யா நீ!”

“ஏன் சேர்த்துக்கோயேன்... ‘தைப்பொங்கல்’ னு அழைக்கிறதுக்குப் பதிலா, ‘பைப்பொங்கல்’னு அழைச்சுட்டுப் போறோம்!”

(இருவரும் சிரிக்கிறார்கள்)


- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

தஞ்சாவூர்

கோவை

உக்கடம் பேருந்து நிலையம் அருகில் இருவர்...

“சொன்ன மாதிரி துணிப் பையிலயே பொங்கல் பரிசெல்லாம் கொடுத்துட்டாங்க போல?”

“ஆனா உள்ளுக்குள்ள, 18 பிளாஸ்டிக் பை இருக்கே... அத எப்படி ஒழிக்கிறது?”

“எல்லாத்துக்கும் கேள்வியா? முதல்ல பொங்கல் பண்ணி சாப்பிடுங்கடா. அப்புறம் நீங்க தனியா பொங்கலாம்!”

- கரு. செந்தில்குமார்,

கோவை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in