பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க

தஞ்சாவூர்

ஏடிஎம் சென்டரில் பணம் எடுக்க வந்தவரும் பக்கத்தில் நின்றவரும்...

“என்னது பின் நம்பரை மறந்துட்டீங்களா... உங்க பிறந்தநாள், கல்யாணநாள்னு எதாவது வெச்சிருப்பீங்க... ஞாபகப்படுத்திப் பாருங்களேன்..?"

“அட... ஆமா. என் கல்யாண தேதியைத்தான் வச்சிருக்கேன்... உங்களுக்கு எப்படி தெரியும்?”

“எனக்குத் தெரியறது இருக்கட்டும். நாலு பேருக்கு தெரியற மாதிரி அழுத்தாம, கமுக்கமா அழுத்தி பணம் எடுங்க பாஸ்!”

-பா.து.பிரகாஷ்,

தஞ்சாவூர்

கமுதி

மீன் மார்கெட் ஒன்றில்...

“என்னப்பா இது... மீன் டெய்லி ஒரு விலையா இருக்கே?!”

“ஆமா... சார். உக்ரைன் போர் நடக்குறதால் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க போறது இல்லையா... அதான் மீன் விலையும் ஏறிக்கிட்டே போகுது.”

“ஏப்பா... நா தெரியாமத்தான் கேக்குறேன். யாருமே கடலுக்குப் போகாம, கடல் மீன் எப்படிப்பா கடைக்கு வந்துச்சு?”

(கடைக்காரர் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார்)

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

பரங்கிப்பேட்டை

ஒரு மளிகைக்கடை அருகில்...

“வாழ்க்கையில நான் நினைக்கிற எதுவுமே சரியா இருக்க மாட்டேங்குது மாப்ள..!”

“என்னடா ஆச்சு?”

“பெட்ரோல் விலை ஏறுதுன்னு பேட்டரி ஸ்கூட்டர் வாங்கினேன், இப்ப என்னடான்னா, பேட்டரி வண்டியெல்லாம் தீப்பிடிச்சு எரியுது.”

(கேட்டவர் அவரைத் திகிலுடன் பார்த்துக்கொண்டே நகர்கிறார்)

- சிவகுமார் நடராஜன்,

பரங்கிப்பேட்டை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in