பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க

திருச்சி

உணவகம் ஒன்றில்...
“உங்க ஹோட்டல்ல உட்கார்ந்து சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு!”
“ஏன் தம்பி… வீட்டுச் சாப்பாடு சேரலையா?”
“அப்படி இல்லண்ணே! வீட்டுச் சாப்பாட்டையெல்லாம் குறை சொல்ல முடியாது. ஆனா, உங்க கடைப் பக்குவம் வராதே...”
“வேணும்னா என் கைப் பக்குவத்தை எழுதித் தர்றேன். 
உங்க ஒய்ஃப் கிட்ட கொடுத்து செய்யச் சொல்லுங்க."
“அட நீங்க வேறண்ணே... போன லாக்டவுன்ல இருந்தே சமையல் நான்தான்!”
- சிவம், திருச்சி

வேதாரண்யம்

சூப்பர் பஜாரில் இருவர்...
“என்ன மாப்ளே... மெமரி கார்டெல்லாம் வாங்கிட்டுப் போற? பாட்டு ரசிக்கிற மூடெல்லாம் வருதாடா உனக்கு?”
“இருக்கிற பிரச்சினையில அதுதான் குறைச்சல். பாட்டு எனக்
கில்லைடா. என் ஒரு வயசு பையனுக்கு, அவனுக்குப் பாட்டு கேட்டா
தான் தூக்கம் வருது... வாங்கிட்டுப் போகலன்னா என் பொண்டாட்டி தாலாட்டுப் பாட ஆரம்பிச்சிடுவா. அப்புறம் எனக்கே தூக்கம் வராது.”
“ம்க்கும். நீ மட்டும் பெரிய ஜேசுதாஸா? பேசாம யூடியூப்ல தாலாட்டு பாட்டு தேடி ப்ளே பண்ணிவிடு. சிம்பிள் மேட்டர்டா இதெல்லாம்...”
“அதுசரி… பேச்சுலரா இருக்கிறோங்கிற சந்தோஷத்துல ஐடியா வெல்லாம் குடுக்கிறே… நீயும் மேரேஜ் பண்ணிப் பாரு. அப்புறம் தெரியும்!”
- ந.விஜய்ஆனந்த், தோப்புத்துறை

கன்னியாகுமரி

கடைக்காரரும் வாடிக்கையாளரும்...
“என்னண்ணே...மாஸ்க் போடாம வியாபாரம் பண்றீங்க... கரோனா பயம் விட்டுப்போச்சா?”
“ஏம்ப்பா பதறுறே? கரோனாதான் கட்டுக்குள்ள வந்திடுச்சே...”
“எது... கரோனா கனவுல வந்து உம்மகிட்ட சொல்லிச்சாக்கும்?”
“அட டிவி-ல எல்லாம் சொல்றாங்களே...”
“அப்படியா சேதி? அப்படீன்னா எந்நேரமும் பிரேக்கிங் நியூஸ் போட்டு பீதியில வச்சிருந்தாத்தான் நீங்களும் பயந்துக்கிட்டு மாஸ்க் மாட்டிக்குவீங்க இல்ல?”
கடைக்காரர் கப்சிப்!
- மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை

தஞ்சாவூர்

தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருவர்...
“என்னங்க இது… 50 சதவீதப் பயணிகள் மட்டும் சமூக இடைவெளியுடன் பயணிக்கலாம்னாங்க… இங்க கூட்டம் அலைமோதுதே?”
“அதுக்கு 100 சதவீதம் பேருந்து விடணும்! அதுக்கு 
அவுங்க எங்க போவாங்க? நாமதான் 50 சதவீதம் வெளியே வரணும்.”
“சரி வெயிட் பண்ணி, அடுத்த வண்டியில போலாம்!"
“ஆமா, அதுல மட்டும் கூட்டம் கம்மியாவா இருக்கப்போகுது? வாங்க முட்டித் தள்ளிக்கிட்டு இதுலேயே போய்ச் சேருவோம்!”
“ஏங்க, நல்ல வார்த்தையா சொல்லுங்க! நான் தடுப்பூசிகூட இன்னும் போட்டுக்கல.”
(இருவரும் சிரிக்கிறார்கள்)
- அய்யாறு ச.புகழேந்தி, தஞ்சாவூர்

திருவல்லிக்கேணி

ஒரு ஓட்டலில் இரு நண்பர்கள்...
“ஏம்பா... கரோனாவுல இருந்து மீண்டவங்களுக்கு மறதி 
நோய் வருதாமே, உனக்கு அப்படி ஏதாச்சும் வந்துடுச்சா?”
“உங்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருந்தேன் மறந்தே
போச்சு. இப்பல்லாம் செல்லை எங்கே வைச்சேன், பர்ஸை எங்கே வைச்சேன்னே மறந்துபோய் தேட வேண்டியிருக்கு...”
“அதெல்லாம் சரி, எங்கிட்ட கைமாத்தா ஐயாயிரம் ரூபா கடன் வாங்குனது மறக்கலைதானே?”
“அப்படியா? சரியா ஞாபகமே இல்லையே மாப்ஸ்.”
“ஆங்… இப்படி நீ டபாய்ப்பேன்னு தெரிஞ்சுதான் உனக்கு வாட்ஸ்-அப்ல மெசேஜும் அனுப்பினேன். நீ
படிச்சுட்டேன்னு ப்ளூ டிக் கூட வந்துச்சு. என்கிட்ட ஆதாரம் இருக்கு மவனே!”
“அடப்பாவிகளா, இப்படி டெக்னிக்கலா பேசி கடனைத்
திருப்பி கேட்கிறியேடா… பணம் வந்ததும் தந்துடறேன். இப்போதைக்கு என்னை விடுடா டேய்!”
- எ.எம்.முகமது ரிஸ்வான், சென்னை

வேலூர்

சாரதி மாளிகை எதிரில்…
“பரவாயில்லைப்பா… எலெக்‌ஷன்ல தோற்றாலும் பாஜக தலைவர் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு"
“ஆமாம்பா, முன்பும் எம்பி எலெக்‌ஷன்ல தோற்ற தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைச்சதே"
“வெற்றிகரமான தோல்வின்னு தமிழிசை சொன்னதை பாஜக அப்பப்போ இந்த வழியில நிரூபிச்சிக் காட்டுது போல!"
(இருவரும் சிரிக்கிறார்கள்!)
- அ.சுகுமார், காட்பாடி

மதுரை

ஒரு டீக்கடை முன்பு...
“ஏம்ப்பா புதுசா ‘சிக்கா’ன்னு ஏதோ ஒரு நோய் வந்திருக்காமே?”
“அது சிக்கா இல்லை... ஸிகா.”
இன்னொருவர்… “ரெண்டும் இல்லப்பா. அது ஜிகா.”
“என்னமோ வாய்க்குள்ளேயே நுழைய மாட்டேங்குது...”
“வாய்ல நுழையுதோ இல்லையோ… முதல்ல 
வாயைக் கழுவுய்யா. அதான் நம்மூருக்கு இன்னும் அதெல்லாம் வரலைல்ல. அப்புறம் எதுக்குப் பீதியைக் கிளப்பிட்டு… சும்மா!”
- பாளைபசும்பொன், மதுரை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in