மனசு மாறி மாணிக்கமா வாழுறேங்க!- ரவுசை மறந்த ராஜேந்திர பாலாஜி

மனசு மாறி மாணிக்கமா வாழுறேங்க!- ரவுசை மறந்த ராஜேந்திர பாலாஜி

சானா
readers@kamadenu.in

காலையிலேயே சில பல சாமான்களை வாங்க வேண்டியிருந்ததால், பறக்கும் பைக்கை எடுத்துக்கொண்டு வான் வழியே வலம் சென்றிருந்த பாச்சா, அரை மணி நேர அலைச்சலுக்கே வெப்பம் தாங்காமல் வியர்க்க விறுவிறுக்க வீடு திரும்பினான். “அடேங்கப்பா என்னா சூடு! மழை பேஞ்சாலும் வேக்காடு விடாது போல இருக்கே...” என்று அவனை முந்திக்கொண்டு அலுத்துக்கொண்டது பைக்.

“அட, அதுகூட பரவாயில்லடா. அஞ்சு நிமிஷம் மழை பேஞ்சாலும் ஆறு மணி நேரத்துக்குக் கரன்ட் கட் ஆகிடுது. இதுல இனி பவர் கட்டே இருக்காதுன்னு செந்தில் பாலாஜி ஸ்டேட்மென்ட் வேற விட்டார். ஒருவேளை அதுல மழைக்கு விலக்குக் கொடுத்துட்டாங்க போல...” என்று சொன்ன பாச்சா, ஏதோ நினைவுக்கு வந்தவனாக, “இன்னொரு விஷயம்டா மெட்டல் மண்டையா! நல்லவேளை பெட்ரோல் போட்டு ஓட்டுற மாதிரி உன்னை டிசைன் பண்ணலை. அப்படி மட்டும் இருந்திருந்தா, இன்னைக்குப் பெட்ரோல் விக்கிற விலைக்கு உன்னைப் பேரீச்சம் பழத்துக்கு எடைக்குப் போட்டிருப்பேன்” என்றான்.

‘கரகாட்டக்காரன்’ கார் ரேஞ்சுக்கு தன் நிலை காலாவதி ஆகிவிட்டதை எண்ணி ஜெர்க் ஆன பைக், வழக்கம்போல் அதைக் காட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டது. “இன்று முதலாமவர் ராஜேந்திர பாலாஜி” என்று பைக் பட்டியலைப் படிக்க ஆரம்பித்ததும், இந்த முறை பாச்சா பதறிப்போனான். “சேச்சே… அவர் முன்னே மாதிரி இல்லப்பா. அவர் திருந்தி வாழ்றதா அவரே சொல்லியிருக்கார்” என்று சமாதானப்படுத்தியது பைக்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in