அனில் கபூர் பாட்டால் டிவிக்கு ஆபத்து- அரண்டு மிரளும் செந்தில் பாலாஜி

அனில் கபூர் பாட்டால் டிவிக்கு ஆபத்து- அரண்டு மிரளும் செந்தில் பாலாஜி

சானா
readers@kamadenu.in

வழக்கம்போல அன்றைக்குக் காலையிலும் படபடப்பாக இருந்தான் பாச்சா. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல், பறக்கும் பைக்குக்குச் சார்ஜ் போட முடியாததால் ஆள் ரொம்பவே ஆடிப்போயிருந்தான். ஓடிடி-யில், புதிய தமிழ்ப் படம் ஒன்றைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த உலக சினிமா ரசிகர் கணக்காக அசைவற்று இருந்த பைக்கைப் பார்க்கவே பாவமாக இருந்தது. சற்று நேரத்தில் மின்சாரம் மின்னல் போல பொசுக்கென வந்தது. பாச்சா ஆசுவாசமாக மூச்சுவிடும்போது, வந்த வேகத்தில் பொசுக்கென போனது. பிறகு பொசுக்கென வருதல், பொசுக்கென போகுதல் என அரை மணி நேரம் ஆட்டம்காட்டிவிட்டு அப்படியே செட்டில் ஆனது.

ஒருவழியாக, பறக்கும் பைக்குக்கு மின்சார உயிர் வந்ததும் உற்சாகத்துடன் பாச்சாவைச் சுமந்தபடி கிளம்பியது. பாச்சா எதுவும் சொல்லாதபோதிலும், அவனது மைண்ட் வாய்ஸை மோப்பம் பிடித்து, ஸ்ட்ரெய்ட்டாக செந்தில் பாலாஜி வீடு முன் சேஃப் லேண்டிங் ஆனது.

செல்லூரார் தொடங்கி எடப்பாடி வரை சீனியர்களை மீம்ஸில் பார்த்து சிரித்துப் பழகிவிட்ட செந்தில் பாலாஜி, முதன்முறையாகத் தன் படத்துடன் வரும் மீம்ஸைப் பார்த்து மிரண்டுபோயிருந்தார். பின்னர், செய்திகளையாவது பார்க்கலாம் என்று சேனல் மாற்றிக்கொண்டே வந்தவர், ‘முதல்வன்’ இந்தி ரீமேக் பாடல் ஒலித்ததும் சற்று நிதானித்து ஆசுவாசமாகக் கேட்டுக்கொண்டிருக்க ஆவேசமாகக் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in