கவர்மென்டைக் கலாய்க்கிறது கலகலப்பா இருக்கு!- ஜாலி மூடில் ஜெயக்குமார்

கவர்மென்டைக் கலாய்க்கிறது கலகலப்பா இருக்கு!- ஜாலி மூடில் ஜெயக்குமார்

சானா
readers@kamadenu.in

அன்றைய பணிகளுக்காக பாச்சா அரக்கப்பரக்க ரெடியாகிக்கொண்டிருந்த சமயத்தில், அவனது செல்போனை நோண்டிக்கொண்டிருந்தது பறக்கும் பைக். “யோவ் பாச்சா! வில்லங்கம்னு ஒரு நம்பரை சேவ் பண்ணி வச்சிருக்கே இல்ல… அதுல இருந்து வாட்ஸ்-அப்ல ஒரு அசத்தல் அரசியல் மீம்ஸ் வந்திருக்கு” என்று அது குதூகலமாகக் கூவியதைக் கேட்டு திடுக்கிட்ட பாச்சா, “யப்பா டேய்… நான்தான் வில்லங்கம்னு பேரே வச்சிருக்கேனே… அப்புறம் ஏன் அதை எடுத்துப் பார்க்கிறே? ஏற்கெனவே கவர்மென்ட் ஐடி ரூல்ஸ் கொண்டுவரப்போறதா சொல்லியிருக்கு… அதுல ப்ளூ டிக், ரெட் டிக்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வெடி இருக்குன்னு ஊரே ஒரே பேச்சா இருக்கு. விஷயம் புரியாம நீ வேற...” என்று பதறினான்.

“அட பயப்படாதப்பா. அதெல்லாம் இன்னும் முடிவாகலை. வாட்ஸ்-அப்ல வர்றதுல பாதி வதந்திதானே” என்று சமாதானப்படுத்தியது பைக். சரிதானென்று பாச்சா தலையாட்டியதும் சிரித்துக்கொண்ட பைக், “யாருதான்யா அந்த வில்லங்கம்... கொஞ்சம் விளக்கப்படாதா?” என்றது.

“வர்ற மெசேஜை வாசிச்சுப் பார்க்காமலேயே ஃபார்வேடு பண்றவங்க எல்லாமே வில்லங்கம்தானே. சொந்தக்காரங்களைவிட இதுல வேற யாரு சோபிக்க முடியும்? எல்லாம் பக்கத்துச் சொந்தம்தான். வா பொழைப்பைப் பார்ப்போம்” என்று வாசல் தாண்டினான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in