அல்லுடு ரெங்கசாமியோட பையன்தான் ஆர்னால்டு!- எச்.ராஜா எக்குத்தப்பு

அல்லுடு ரெங்கசாமியோட பையன்தான் ஆர்னால்டு!- எச்.ராஜா எக்குத்தப்பு

சானா
readers@kamadenu.in

காலையில் பரபரப்பாகப் பல்விளக்கிக் கொண்டிருந்தான் பாச்சா. “பல்விளக்கிறதையெல்லாம் பரபரப்பான விஷயமாக்கி பந்தா காட்டுறதெல்லாம் ரொம்ப ஓவர்யா யோவ்” என்று ஹாலிலிருந்து குரல் கொடுத்தது பறக்கும் பைக். “நக்கல் பண்ணாதே… இன்னிக்கு லிஸ்ட்ல முதல் பெயரே எச்.ராஜாதான். ஆல் பர்ப்பஸ் அங்கிளா இருந்தாலே ‘ஆன்டி’ இந்தியன்னு பேரு வச்சி அந்நியனாக்கிடுவார். நான் ஏற்கெனவே அந்தப் பட்டம் வாங்கிட்டேன். இந்தத் தடவை மாஞ்சா நூல் வச்ச மஞ்சப் பட்டத்தைக் கழுத்துல மாட்டிடுவாரோன்னு மனசுக்குள்ள கெதக்குன்னு இருக்கு” என்றான் பாச்சா.

முழு ஊரடங்கு அமலாகியிருக்கும் நகர் முழுவதும் ஒரே கூட்ட நெரிசலாக இருந்தது. தாடையில் மாஸ்க் மாட்டியவாறு தாறுமாறாக வந்தவர்களை வான் வழியே பார்த்து வருத்தப்பட்டனர் பாச்சாவும் பைக்கும்.

“கரோனா இரண்டாம் அலையெல்லாம் கடந்து கறுப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சைன்னு அங்கங்கே களேபரமா இருக்கு. ஆனா, மக்கள் அதையெல்லாம் கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலயே” என்றது பைக். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மாஸ்க்குக்குள் மவுனம் காத்தான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in