பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

பலாப்பழ சுளை விற்கும் பாட்டியும் வாடிக்கையாளரும்...
“பாட்டி... உன் கடைக்கெல்லாம் அனுமதியே கிடையாது! போலீஸ் வர்றதுக்குள்ளே கிடைச்ச விலைக்கு வித்துட்டு இடத்தைக் காலிபண்ணுவேன்னு பார்த்தா, கால் கிலோ நாற்பது ரூபாய் சொல்றியே?”
“நானும் போலீஸ் வர்றதுக்குள்ளே வித்துட்டுப் போகணும்னு தாம்பா நினைக்கிறேன். இந்தக் கஷ்ட காலத்துலயும் கறாரா பத்து ரூபாய்க்காக பேரம் பேசறியே, நியாயமா? போலீஸ் வந்தா நீயும்தானே பதில் சொல்லணும்...”
“அதுவும் சரிதான். அவசரத்துல மாஸ்க் போடாம வந்துட்டேன். சீக்கிரம் அரை கிலோ போடும்மா!”
(பாட்டியின் முகத்தில் வெற்றிக்களை!)
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.

காட்பாடி

ரேஷன் கடை அருகில்…
“என்ன தம்பி, கரோனா பணத்தை உன் சம்சாரம் க்யூவுல நின்னு வாங்கியாச்சுபோல... சந்தோஷம்தானே?”
“சந்தோஷம்தான்க்கா. இருந்தாலும் இன்னைக்கு இருக்கிற சூழல்ல இப்படி கூட்டத்துல வச்சு குடுக்கிறதைவிட பேங்க் அக்கவுன்ட்ல பணத்தைப் போட்டிருக்கலாம்.”
“அதானே பார்த்தேன். பொம்பளைங்ககிட்ட பணம் கிடைச்சா வீட்டு செலவுக்காகுது. பேங்குல போட்டா வீட்டு ஆம்பளங்க ஏடிஎம் கார்டைப் போட்டு எடுக்கிற பணம் எங்கெங்கே போகுமோ?”
“என்னக்கா அப்படி பட்னு சொல்லிட்டீங்க?”
“தம்பி நான் உன்னைச் சொல்லலை… பொதுவா சொன்னேன். நீ எவ்வளவு நல்லவன்னு எனக்குத் தெரியாதா?”
(தம்பி தர்மசங்கடத்தில் நெளிகிறார்!)
-அ.சுகுமார், காட்பாடி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in