பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

டீக்கடையில் இருவர்...
“என்னப்பா ஒருவழியா உங்க கட்சி ஆட்சியைப் பிடிச்சிடுச்சு. இனி என்ன பண்ணப்போறீங்க!?”
“முதல்ல கரோனா ஒழிப்பு... அப்புறம் பொருளாதாரச் சீர்திருத்தம்!”
“நல்லது. ரெண்டையும் இங்கேயே ஆரம்பிச்சு வச்சிடு! மாஸ்க்கை மாட்டு முதல்ல… அப்புறம் வந்திருக்கிற எல்லாருக்கும் டீ சொல்லிடு!”
“அய்யய்யோ… அபிமானக் கட்சி எலெக்‌ஷன்ல ஜெயிக்கிறதுல இப்படிக்கூட ஆபத்து இருக்கா?”
(கடையில் சிரிப்பொலி!)
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

திருச்சி

டாஸ்மாக் ஒன்றில்...
“ஆறு பீர், நாலு குவாட்டர் குடுங்க...”
“தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள்ல கும்பலா ஈடுபடக் கூடாது தெரியும்ல?”
“இதென்ன வம்பா இருக்கு? இதெல்லாம் நான் மட்டும் குடிக்கிறதுக்குத்தான்!”
“ஓ தனியா வெற்றிக் கொண்டாட்டமா... திமுக ஆளா நீங்க?”
“நான் அதிமுக ஆளுய்யா. துக்கம் தொண்டையை அடைக்குதுன்னு தொண்டைய நனைக்க வந்தேன்."
-சிவம், திருச்சி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in