பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

கம்பம்

டீக்கடை ஒன்றில்…
“சர்க்கரை தூக்கலா ரெண்டு டீ போடுங்கண்ணே...”
“பார்சல்தானே?”
“ஏண்ணே கடையில குடிக்கக் கூடாதா?”
“அதான் கடையில நின்னு குடிக்கக் கூடாதுன்னு கவர்மென்ட்டே ஆர்டர் போட்டுடுச்சே… நியூஸ் படிக்கலையா?”
“எங்கேண்ணே… வேலையில கவனமா இருந்ததால கவனிக்கலை.”
“சரியாப் போச்சு போங்க. பார்சல் மட்டும்தான் அனுமதி. வேணும்னா கவர்ல பார்சல் வாங்கிட்டு அப்படி ஓரமா நின்னு குடிங்க...”
“என்னண்ணே... சரக்கடிக்கிறவன்கிட்ட சொல்ற மாதிரி சொல்றீங்க?”
“நிலைமை அப்படி தம்பி!”
- பெ. பச்சையப்பன், கம்பம்

சீர்காழி

திருமண மண்டபம் ஒன்றில் இருவர்...
“முன்னாடியெல்லாம் மாப்பிள்ளை அழைப்புன்னா ஆயிரம் பேர் புடைசூழ வெடிச் சத்தம், வாணவேடிக்கைன்னு அமர்க்களமா நடக்கும். இன்னிக்கு வெறும் நாற்பது பேரு... இதுதான் உலகம்.”
“கரோனா யுகத்துல இதுதான் கல்யாணம் மச்சான். நம்ம நண்பனுக்குப் போன மாசமே கல்யாண தேதி ஃபிக்ஸ் பண்ணியிருந்தா நீ சொல்ற மாதிரி அசத்தியிருக்கலாம்.”
“ப்ளாட்பாரத்துல படுத்துத் தூங்கினாலும் கூட்டமா வாழணும். அதாண்டா வாழ்க்கை.”
“புலம்புனது போதும். நைட் 10 மணி ஆக இன்னும் முக்கால் மணி நேரம்தான் இருக்கு. அதுக்கப்புறம் போலீஸ் கூட்டமா இருக்கும். பேசாம கிளம்பு.”
- பி.கே.ராதா, சீர்காழி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in