பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

சீர்காழி

கடைவீதியில் இருவர்...
“ரேஷன் அரிசி ரொம்பப் பழுப்பா இருக்கு... இப்பல்லாம் சாப்பாடு வயித்துக்குள்ள இறங்கவே மாட்டேங்குதுண்ணே!”
“என்னாங்கடா டேய்! எலெக்‌ஷன் நேரத்துல எப்பப் பார்த்தாலும் ஓசி பிரியாணி, டீ, வடை, சரக்குன்னு வயித்துக்கும் வாய்க்கும் ரெஸ்ட் கொடுக்காம ஓடுனீங்க. இப்ப ரேஷன் அரிசி ஒத்துக்கலைன்னு ஓவரா சீன் போடுறீங்க!”
“அதுசரிதான்… ஆனா, தேர்தல் என்ன தினமுமா நடக்குது?!”
“அதானே, உங்களுக்கெல்லாம் தேர்தல்னா அர்த்தமே இதுதானே. திருந்துங்கடா... டீ வாங்கித் தர்றேன்!”
- பி.கே.ராதா, சீர்காழி.

தஞ்சாவூர்

பேருந்து நிலையத்தில் கரைவேட்டிகள் இருவர்...
“எலெக்‌ஷன் முடிஞ்சுட்டா ஓட்டை எண்ணி ரிசல்ட்டைச் சொல்லிட வேண்டியதுதானே... அதை எதுக்கு அடைச்சி வைக்கணும்? வெயில்லே சூடாகி ஓடு அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்னு பார்க்கிறீங்களோ?”
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா... எல்லா மாநில எலெக் ஷனும் முடிய வேணாமா?”
“ம்க்கும்…. இது வரைக்கும் வட மாநிலத் தேர்தல் நடக்கவே இல்லியா... அப்ப எல்லாம் மூணு நாளிலே ரிசல்ட் சொல்லலையாக்கும். இருங்க இருங்க… ரிசல்ட்ல மட்டும் ஏதாச்சும் முன்ன பின்ன ஆச்சு… நாங்க சும்மா இருக்க மாட்டோம்!”
“அதெல்லாம் கிடக்கட்டும். இன்னிக்கும் நான் தான் சரக்கு வாங்கித் தரணும். தேவையில்லாம பாலிடிக்ஸ் பேசி அதையும் மிஸ் பண்ணிடாதே…”
“அரசியல் வேற... நட்பு வேற மாம்ஸு. கோபப்பட்டு என் குவாட்டருக்குத் தடை போட்டுடாதே!”
(இருவரும் சேர்ந்தே சிரிக்கிறார்கள்!)
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in