லா பாயின்டா இல்லாட்டியும் லாஜிக்கோட பேசுப்பா- எகிறிய எல்.முருகன்

லா பாயின்டா இல்லாட்டியும் லாஜிக்கோட பேசுப்பா- எகிறிய எல்.முருகன்

சானா
readers@kamadenu.in

பைக் மீதேறி பாச்சா நகர்வலம் வந்தபோது, ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களுக்கு முன்னர் தேவுடு காக்கும் தேர்தல் பணியாளர்கள் பார்வைக்குப் பட்டார்கள். ரிட்டயர்டு ஆனாலும் வீட்டைக் காலி செய்யாத சுரப்பா மாதிரி, வாக்குப் பதிவு முடிந்தும் வான்ட்டடாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களைச் சுற்றி வளையம் அமைத்து, சூட்கேஸ் சகிதம் வருபவர்களைக் கூட வம்படியாகப் பிடித்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள் உடன்பிறப்புகள்.
கன்டெய்னர்களைப் பார்த்தாலே கலவரமாகி நிறுத்தி விசாரித்துக்கொண்டிருந்த திமுகவினரைப் பார்த்ததும், “ஒரே காமெடியா இருக்கு இல்ல?” என்று பைக் சிரிக்க, “சிரிக்கிறதுக்கான மேட்டர் இல்லப்பா இது. இந்தியா டிஜிட்டல்மயமாகுதுன்னு ஆளாளுக்குச் சொன்னாலும் எலெக்‌ஷனுக்கும் ரிசல்ட்டுக்கும் இடையில எதுக்கு இவ்ளோ கேப்புன்னுதான் எதிர்க்கட்சிக்காரங்க கேட்கிறாங்க… கவனிச்சியா?” என்றான் பாச்சா. ஆமோதிப்பதுபோல அமைதியானது பைக்.

அன்றைய பட்டியலில் முதலில் இருந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படத்தைக் கண்கலங்க பார்த்தபடி, தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தின் தேதி விவரங்கள் குறித்து தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தார் ‘செங்கல்’ புகழ் சேப்பாக்கம் வேட்பாளர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in