பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

நாகர்கோவில்

மினி பஸ் ஒன்றில் நடத்துநரும் பெரியவரும்...
“யோவ்… போதை தெளிஞ்ச பிறகு வந்திருக்கலாம்ல? சரி சரி... மாஸ்க்கை எடுத்து மாட்டிக்கோ.”
“மாஸ்க்கா… எனக்கு எதுக்கு மாஸ்க்கு?”
“யோவ் என்ன உளறுறீரு..?”
“நான் உளறலை. சரக்கு வாடைக்கு எந்த வைரஸும் நெருங்காதாக்கும்..."
“ம்க்கும்... இவரு பார்த்தாரு...”
“புரிஞ்சிக்கிட்டு பேசுப்பா. எல்லாத்துக்கும் கட்டுப்பாடு கொண்டுவர்ற கவர்ன்மென்டு, டாஸ்மாக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கலை பார்த்தியா.. அதை வச்சு நீ புரிஞ்சுக்க வேண்டாமா?”
(ஸ்தம்பித்து நிற்கிறார் நடத்துநர்)
- மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.

சீர்காழி

பஸ் ஸ்டாண்ட் டீ ஸ்டாலில்...
“தம்பி... டீ சாப்பிட்டாச்சுன்னா கல்லாவுல காசைக் கொடுத்துட்டுக் கிளம்புங்க. கூட்டம் போட்டு பேசிக்கிட்டு இருக்கிற வேலையே வேண்டாம்.”
“என்ன மாஸ்டர் இது... நாங்க தனிமனித இடைவெளி விட்டுத்தானே நிக்கறோம்… நீங்க ஏன் டென்ஷனாகிறீங்க?”
“இந்த லா பாயின்ட் எல்லாம் என்கிட்டே பேசாதீங்க. எதிர்த்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. சிசிடிவியில இதையெல்லாம் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. பின்னி பெடலெடுத்துடுவாங்க.”
(‘சங்கம்’ அவசரமாகக் கலைகிறது!)
- வி.அனுசுயா, சீர்காழி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in