பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

திருச்சி

பாலக்கரையில் இருவர்...
“என்ன நண்பா... வேலைக்குப் போகாம குட்டிச்சுவத்து மேல உட்கார்ந்திருக்க?"
“எல்லாம் ஒரு பயிற்சிதான்.”
“பயிற்சியா? குட்டிச்சுவத்துல குந்துறதுக்கெல்லாம் என்னாங்கடா பயிற்சி வேண்டிக் கிடக்கு?”
“விஷயம் இருக்கு மாப்ஸு. திடீர்னு மாசக்கணக்குல கவர்ன்மென்ட் லாக்டவுன் போட்டுட்டா, வெளியே வரவே முடியாது… தீடீர்னு குட்டிச்சுவத்துல ஏறி உட்கார்ந்தா என்னவோ போல இருக்கும். அதான் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு உட்கார்ந்து பார்க்கிறேன்.”
“உட்கார்ந்து யோசிப்பீங்களாடா..?!"
- சிவம், திருச்சி.

காட்பாடி

சாலையோர டீக்கடையில்...
“இப்பவே வெயில் இந்தப் போடு போடுதே. போற போக்கைப் பார்த்தா சராசரியா தினமும் 110 டிகிரி வெயில் கொளுத்தும் போல...”
“கரெக்ட். முன்கூட்டியே இதைப் பத்தி யோசிச்சிருந்தா நம்ம கட்சிகள் வீட்டுக்கு ஒரு விலையில்லா ஏ.சி தருவோம்னு நடக்காத சங்கதியை எல்லாம் வாக்குறுதியா தந்திருப்பாங்க.”
“ஏன் நடக்காது... சைனா மாடல்ல சீப்பா ஏ.சி கிடைக்கும்தானே?”
“நல்லது கெட்டது எல்லாத்துக்குமே சீனா வந்து நம்ம வாயில நிக்குதுப்பா. நல்லவேளை சீனா டீத்தூள்னு ஒண்ணு பிரபலமாகி பிரச்சினை எதுவும் வரலை...”
டீக்கடைக்காரர் குறுக்கிட்டு, “ஏன்யா... நம்மள வம்பிழுக்கலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே..?"
(கடையில் சிரிப்பு!)
- அ.சுகுமார், காட்பாடி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in