டீச்சர்னு போனவங்கள டீல்ல விட்டுட்டாங்க!

டீச்சர்னு போனவங்கள டீல்ல விட்டுட்டாங்க!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

யாரோ சிநேகிதியைப் பார்க்கப் போறேன்னு அம்மிணி கிளம்பிப் போனாங்க.  “வண்டில கொண்டு போய் விடவா’’ன்னு அக்கறையா விசாரிச்சேன். ‘‘வேணாம். இன்னொரு அம்மிணி ஆட்டோல வராங்க. சேர்ந்து போயிருவோம்”னு நம்மள கழிச்சு விட்டாங்க.

ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு. வீடு திரும்பினவங்க முகத்துல ஒரு பரபரப்பு. எதிர்வீட்டு ஒன்றரை வயசுக் குழந்தை குறுக்கால வந்துச்சு. “பாரேன். பொறுப்பில்லாம புள்ளைய விட்டுட்டு உள்ர ஒக்காந்துருக்கு. நானெல்லாம் எம்புள்ளைய சொந்தக்காரங்க வூட்டுக்குக்கூட அனுப்பினதில்ல. எதைத் தள்ளி ஒடைக்கும்னே தெரியாது. அம்போன்னு விட்டுடறாங்க”ன்னு புலம்பித் தள்ரவங்க, இன்னிக்கு வாரி எடுத்து அணைச்சுக்கிட்டாங்க.

அது மிரண்டு போய் கத்துச்சு. அம்மாக்காரி உடனே ஓடி வந்தாங்க. அம்மிணியை சந்தேகமா பார்த்தாங்க.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in