ஐ-பேக்... ஐ வில் பி பேக்!- உதயநிதியைக் கலாய்த்த பைக்

ஐ-பேக்... ஐ வில் பி பேக்!- உதயநிதியைக் கலாய்த்த பைக்

சானா
readers@kamadenu.in

காலங்கார்த்தாலேயே ஏதோ ஒரு நெடுந்தொடரைப் பார்த்து நெக்குருகி அழுதுகொண்டிருந்தது பைக். யதேச்சையாகக் கண்விழித்த பாச்சா, அந்தக் காட்சியைக் கண்டதும், “என்னப்பா நீ, சீட்டு கிடைக்காத சீனியர் எம்எல்ஏ-க்கள் மாதிரி கண்ணீரும் கம்பலையுமா காமெடி பண்ணிட்டு இருக்கே? கெளம்புற ஐடியாவே இல்லையா” என்று கிண்டல் செய்தான்.

“இப்படியெல்லாம் நீ வாருவேன்னு தெரிஞ்சுதான், அவங்களை மாதிரி நானும் சுயேச்சையாவே செயல்பட்டு, சிக்குறவங்களை வச்சு சிறப்பா பேட்டி எடுக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தேன்” என்றது பைக். பதறிப்போன பாச்சா, “ஏற்கெனவே, கட்சிக்காரங்கள்லாம் எப்படியாவது ஜெயிச்சாகணும், இல்லைன்னா ஓட்டையாவது பிரிச்சாகணும்னு ஓடிட்டு இருக்காங்க. நீ பாட்டுக்கு எதையாச்சும் பேசி, தேர்தல் நேரத்துல தேரை இழுத்து தெருவுல விட்டுடாதே” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
லிஸ்ட்டில் முதலாமவர் உதயநிதி.

சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராகக் களமிறங்கும் உதயநிதி, உடன்பிறப்புகள் சகிதம் ‘கெத்து’ சேது கெட்டப்பில் உற்சாகமாக ஓட்டு வேட்டையாடிக்கொண்டிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in