பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

சீர்காழி

ரேஷன் கடையில்...
“என்னங்க ரேஷன்ல ரெண்டு மாசமா அரிசி சரியில்லே... பழுப்பு கலர்ல... ஒரே நெல்லும், கல்லுமா இருக்குது... இதை எப்படிச் சாப்பிடறது?”
"வாஸ்தவம்தான்மா… வருஷத்துக்கு 6 கேஸ் சிலிண்டர், 1,500 ரூபா குடும்பத் தலைவிக்கு இலவசம்னு அறிவிச்சாட்டாங்க. அரிசி குவாலிட்டி சரியில்லைன்னு சொல்லிட்டிங்கன்னா. தேர்தல் முடிஞ்ச வுடனே காஸ்ட்லியான பாஸ்மதி அரிசி போடுவாங்க. திருப்தியா வாங்கிட்டுப் போங்க... சமையல் பண்ண கஷ்டமா இருந்துச்சின்னா சொல்லுங்க… அதுக்கும் ஆள் அனுப்பி வெச்சு சமையல் பண்ணிப் பரிமாறவும் ஏதாச்சும் வழி பண்ணுவாங்க.”
(கோபத்தை மறந்து சிரிக்கிறார் அந்தப் பெண்மணி)
- வி.வெங்கட், சீர்காழி.

வேலூர்

ஒரு கட்சி அலுவலகத்தில்...
“அண்ணே... கிளவுஸ் போட்டுக்கிட்டுத்தான் ஓட்டு போடணும்னு எலெ க்‌ஷன் கமிஷன் சொல்லியிருக்கே ஏன்?”
“அடப்பாவி... இதுகூட தெரியாதா? கரோனா காலம் இன்னும் முடியலைல்ல... அதான் தொற்று பரவுறதைத் தடுக்க இந்த ஏற்பாடு பண்ணியிருக்காங்க.”
“ஒரு ஐடியா... வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் போது நாமளும் கிளவுஸ் போட்டுக்கலாம்... நம்ம கைரேகை எதுலயும் படியாதுல்ல?”
“அடேய் அப்பிரசண்டி... அங்கங்கே சிசிடிவி கேமரா வச்சிருப்பாங்க... இன்னும் கி.மு. காலத்திலேயே இருக்கியேடா...”
“ஆமால்ல… இன்னும் எனக்கு மெஜாரிட்டி வரலை.”
“அது மெஜாரிட்டி இல்லே... மெச்சூரிட்டி!”
(கரைவேட்டிகள் சிரிக்கிறார்கள்!)
- பாலு இளங்கோ, வேலூர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in