வந்தது அமித் ஷாவே இல்லை!- அதிர்ச்சி கிளப்பும் அமைச்சர் ஜெயக்குமார்

வந்தது அமித் ஷாவே இல்லை!- அதிர்ச்சி கிளப்பும் அமைச்சர் ஜெயக்குமார்

சானா
readers@kamadenu.in

வாரம் முழுவதும் டிவியில் கூட்டணி செய்திகளைப் பார்த்த களைப்பில் குழம்பிக்கிடந்த பைக், “அதென்னய்யா… கொள்கை கொள்கைன்னு கூடவே இருக்காங்க. கூட்டணின்னு வந்துட்டா மட்டும் கொரிய அதிபர் கணக்கா வீராப்பு காட்டுறாங்க” என்று புலம்பிக்கொண்டிருந்தது.

“அட அப்பாவி! தேர்தல்ங்கிறது ஜனநாயகத் திருவிழான்னு சொல்றதையெல்லாம் அப்படியே நம்பிட்டியா? அதிகாரத்துக்கு வந்துட்டா ஆட்டுக்குட்டிகூட சிங்கத்துக்கிட்ட ஸ்விகில சிக்கன் ஆர்டர் பண்ணச் சொல்லி ஆட்டம் போடும்யா. சரி விடு… இன்னிக்கு யார் யார் லிஸ்ட்ல இருக்காங்கன்னு படி” என்றான் பாச்சா.

“இன்னிக்கு முதல் வேலையா கன்ச மஹால்-க்குப்போகணும்னு லிஸ்ட்ல போட்டிருக்கு. ஏதாச்சும் கல்யாணமாப்பா?” என்றது பைக்.
“அடப்பாவி! அது கமல்ஹாஸன்ப்பா. பெயரை மாத்தி மாத்தி எழுதினா கலாம்னு வரும்னு சொன்னாலும் சொன்னார்… மனுசன் பாவம்” என்றபடி ஆயத்தமானான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in