பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க

தூத்துக்குடி

ஒரு பெண்மணியும் பழைய இரும்பு சாமான்கள் வாங்குபவரும்...
“இது என்ன அநியாயமா இருக்கு! ‘அம்மா’ 
கிரைண்டருக்கு வெறும் 200 ரூபாதான் தருவேன்னு சொல்றீங்களே?”
“எம்மா... இதை விலைக்குப் போட்டா எனக்கு 
ஐம்பதோ, அறுபதோ கிடைக்கும். நான் ஏம்மா 
உங்களை ஏமாத்தப்போறேன்?!”
“கலைஞர் தந்த அந்த பழைய டிவிக்கே 
அமைச்சர் ஒருத்தர் ஒரு லட்சம் தர்றதா 
சொல்லியிருக்காரு… தெரியும்ல?”
“அப்ப இந்த கிரைண்டரையும் அவர்கிட்டேயே 
கொடுத்து ஒரு லட்சமோ, ரெண்டு லட்சமோ 
வாங்கிக்கோங்க. ஆளை விடுங்க!”
(அந்தப் பெண் கடுப்பாகிறார்!)
- எ.முகமது, சூழவாய்க்கால்

திருச்சி

டாஸ்மாக் கடை ஒன்றில்...
“நான் இந்தக் கடையோட ரெகுலர் கஸ்டமர். எனக்கு யாரு சரக்கு தரக்கூடாதுனு சொன்னது?"
“அதெல்லாம் தெரியாது சார்... நீங்க ஏற்கெனவே கேஷியர்கிட்ட 200 ரூபாய் கடன் வச்சிருக்கீங்களாம். உங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு சரக்கு தரச் சொல்லியிருக்காங்க.”
“என்னய்யா அக்கிரமம், 200 ரூபாயை இன்னுமா கடனா எழுதி வச்சிருக்கான் அந்த ஆளு?”
“ஏன்... இப்ப அது கடன் இல்லையா?”
“அட, என்னய்யா நீ புரியாமப் பேசிக்கிட்டு... அதான் விவசாயக் கடன் எல்லாத்தையும் தள்ளுபடி பண்றதா எடப்பாடி அய்யா சொல்லிட்டாருல்ல... நானும் விவசாயி தானே?!”
(டாஸ்மாக் ஊழியர்கள் ஜெர்க் ஆகிறார்கள்)
- சிவம், திருச்சி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in