கண்ணுபடப் போகுதய்யா காய்க்காரரே!

கண்ணுபடப் போகுதய்யா காய்க்காரரே!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

சொத்தென்று பெரிய சைசில் பொரியல் தட்டில் வந்து விழுந்துச்சு. தீஞ்சு போயிருந்துச்சா... என்னன்னு முதல்ல புரியல. அம்மிணிட்ட கேட்டா சிக்கலாயிரும்னு கொஞ்சம் எடுத்து வாயில் போட்டேன். உவ்வே.

"நல்லாருக்கா"ன்னு கேட்டுட்டு இன்னொரு சொத் போட ரெடி ஆனாங்க அம்மிணி. ரெண்டு கையையும் கூடவே தலையையும் தட்டுக்கு நேரா கவுத்து  “வேணாம்... போனாப் போகுது என்னைய மன்னிச்சு விட்டுரு”ன்னு கெஞ்சினேன்.

“காய் வாங்கிட்டு வரச் சொன்னா வெண்டைக்காயப் பிடிச்சு ஒரு கிலோ வாங்கிட்டு வந்துருக்கீங்க... நான் என்னதான் செய்ய”
ஓ. அது வெண்டைக்காயா. சந்தேகம் தீர்ந்து எடுத்து தட்டுக்கு வெளியே போட்டேன்.  “நான் போனப்ப அதான் இருந்துச்சு,”
வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு மளிகைக்கடை. அதுல எல்லாமே வச்சிருப்பாரு. காலைல போனா லேடீஸ் கூட்டமா 
நிக்கும். எப்படித்தான் ஞாபகம் வச்சுக்கிறாரோ... ஒவ்வொருத்தர் வாங்கறதையும்.  “அண்ணே... வெங்காயம் கால்... தேங்காய்... பச்ச மொளகா...”ன்னு நிக்கிற ஏழு பேரும் பதினேழு ஐட்டம் வாங்குவாங்க. அண்ணாச்சி நடமாடும் கம்ப்யூட்டர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in