பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

வள்ளியூர்

ஒரு டீக்கடையில் இரு நண்பர்கள்...
“மக்கா... நியூஸ் படிச்சியா? கங்குலி வர்ற சமையல் எண்ணெய் விளம்பரத்தை நிறுத்திட்டாங்களாம். அவருக்கு மாரடைப்பு வந்ததுதான் காரணமாம்.”
“நம்ம நாட்டுல எல்லாமே தலைகீழாத்தான் நடக்குது! நியாயப்படி அந்த எண்ணெய் விற்பனையைத்தானே நிறுத்தியிருக்கணும்?”
“என்ன செய்றது? ‘மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும்’னு சொன்ன உங்க ரஜினி அரசியலுக்கு வராம போயிட்டாரே...”
- எ. முகமது ஹுமாயூன், நாகர்கோவில்

அரசர்குளம்

ரேஷன் கடையில்...
“உங்களுக்கு டோக்கன்ல நாளைய தேதி போட்டிருக்கு. இன்னைக்கே வந்தா எப்படி?”
“அதான் கூட்டமில்லேல்ல... இன்னைக்குக் கொடுங்க தம்பி.”
“உங்களுக்கு இன்னைக்குக் கொடுத்துட்டா, அப்புறம் இன்னைக்கு டோக்கன் கொடுத்தவங்களுக்குப் பணமில்லாமல் போய்டும். தயவுசெஞ்சு நாளைக்கு வாங்க...”
“எங்கிட்ட சுத்தமா காசில்லை. ஆயிரம் ரூபாயாவது இன்னைக்குக் கொடுங்க. மீதியை நாளைக்கு வாங்கிக்கறேன்.”
“என்னங்க இது…ரேஷன் கடையை வட்டிக் கடை ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களே…. ம்ம்ம் உங்களைச் சொல்லி என்ன ஆகப்போகுது!?”
- ரஹீம் கஸ்ஸாலி, அரசர்குளம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in