ரெண்டா வாங்கிடுப்பா

ரெண்டா வாங்கிடுப்பா

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

"ஒங்களத் தவிர வேற யாரையும் அவங்களுக்குத் தெரியாது. நீங்களே போயிட்டு வாங்க" சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்காக எங்க வீட்டம்மிணி இப்டித்தான் என்னைய திருப்பூருக்கு கட்டி ஏத்திவிட்டாங்க.

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட். “தோ... அஞ்சு நிமிஷத்துல பஸ்ஸ எடுத்துருவோம்”னு கண்டக்டர் சொன்னாரு. நம்பி ஏறி உக்காந்துட்டு தண்ணிப் பாட்டில தெறந்து ஒரு மடக்கு குடிச்சேன். அப்ப ஒருத்தரு என் மேல வந்து இடிச்சுட்டு, நானே உள்ள போயிடுற மாதிரி அகலமா வாயத் தெறந்து சிரிச்சாரு. நான் பேந்தப் பேந்த முழிக்கவும், “என்னத் தெரியுதா?”ன்னு க்விஸ் நடத்துனாரு.
அம்மிணிக்கு தெரிஞ்சவங்க மாதிரி இருந்துச்சு. இருந்தாலும், “யாரு?”ன்னு கேட்டா அப்புறமா அம்மிணிக்கிட்ட வாங்கிக் கட்டிக்கணும். அதனால, “ஹிஹி... நல்லா இருக்கீங்களா... பாத்து ரொம்ப நாளாச்சு”ன்னு வழிஞ்சேன். “திருப்பூருக்கு தானே”ன்னு அதட்டுனாரு. வேகமா தலையாட்டவும். “நல்லதா போச்சு... பேசிக்கிட்டே போகலாம்”னு இன்னும் வசதியா சாஞ்சுக்கிட்டாரு.
“இவ்ளோ சார்ஜ் செய்யறாங்க. சீட்டை அகலமா வச்சா என்னவாம்”னு சவுண்டு விட்டவரு, நான் வெச்சிருந்த தண்ணி பாட்டில பறிச்சி முழு பாட்டிலையும் காலி பண்ணாரு. “யூஸ் ஆகும்”னு சொல்லி காலி பாட்டிலையும் தன்னோட பையிலயே வெச்சுக்கிட்டாரு. கண்டக்டர் பக்கத்துல வந்ததும் ரெண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து நீட்டுனாரு. “பேலன்ஸ் அப்புறமா வாங்கிக்குங்க”ன்னு அவரு சொன்னதும் நம்மாளு என்னைய பாத்தாரு.

“எறங்குற அவசரத்துல பாக்கிய வாங்காம விட்டுருவோம்... அதனால எனக்கும் சேர்த்து நீயே ரெண்டு டிக்கெட்டா எடுத்துரு. எறங்குனதும் சில்லறை மாத்திக் குடுத்துடுறேன்”ன்னாரு. என்னோட தலைவிதிய நானே நொந்துக்கிட்டு ரெண்டு டிக்கெட் எடுத்தேன். ரொம்பக் கிளவரா அதுல ஒரு டிக்கெட்ட வாங்கி தன்னோட பாக்கெட்டுல போட்டுக்கிருச்சு அந்த மனுஷன்.
பஸ்ஸை எடுத்துட்டதால தண்ணி பாட்டிலும் வாங்க முடியல. மனுசனோ வாய் ஓயாம பேசிக்கிட்டே வந்தாரு. பதில் சொல்லிச் சொல்லியே எனக்கு தொண்டை தண்ணீ அவுட். கரூர் பஸ் ஸ்டாண்டுல தண்ணி பாட்டில் வாங்கிருவோம்னு எந்திரிச்சேன். “ரெண்டா வாங்கிட்டு வா”ன்னு ஆர்டர் பறந்துச்சு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in