ஹலோ... செகரட்டரி இருக்காரா?

ஹலோ... செகரட்டரி இருக்காரா?

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அப்பார்ட்மென்ட் செகரட்டரின்னு பொத்தாம் பொதுவா சொன்னா கெத்தாதான் தெரியும். ஆனா, உள்ளுக்குள்ள அதுல இருக்க இம்சை என்னன்னு எனக்குத்தான் தெரியும். எப்டிச் சொல்றேன்னு கேக்குறீங்களா... நான் தானே எங்க அப்பார்ட்மென்ட் செகரட்டரி!
 அன்னைக்கி ஒரு நாளு, வீட்டம்மிணி வீட்டைத் தொடைச்சுக்கிட்டிருந்தாங்க. சேர் எல்லாத்தையும் வெளியே போட்டுட்டு என்னையும் வெளிய ஒக்கார வச்சுட்டாங்க. ஈரம் காயறவரை உள்ர போயிரக் கூடாது. அப்பதான் இந்த ரூமுக்குப் போவலாமா... அந்த ரூமுக்குப் போவலாமான்னு மனசு அலைபாஞ்சுது.  நெளிஞ்சுகிட்டு நின்னப்போ ரெண்டு பெண்மணிங்க வந்தாங்க.

 “செகரட்டரி  வீடா?”ன்னு  அவங்க கேட்டதும் வேகமா தலைய ஆட்டுனேன்.  “ஓட்டர் ஐடியோட ஆதார் இணைக்கணும்... ஆதார் ஜெராக்ஸ் காப்பி கொடுக்கணும்”னு சொன்னாங்க. “இருங்க எடுத்துக்கிட்டு வரேன்”னுட்டு வீட்டுக்குள்ள போகப் போனேன்.  “நில்லுங்க”ன்னு எனக்கு கேட்டுப் போட்டவங்க, “இப்போ வேணாம். எடுத்து வைங்க அப்புறோம் வர்றோம். அப்டியே இந்த மேட்டர அப்பார்ட்மென்ட்ல இருக்க எல்லா வீட்லயும் சொல்லிருங்க. ஏன்னா...  ‘செகரட்டரி சொன்னாத்தான் குடுப்பாங்க’ன்னு கீழ ஒருத்தரு சொன்னாரு”ன்னாங்க.  

எனக்கு எதுவும் புரியல. இதென்ன கூத்து... அவங்க ஆதார் கார்டைக் குடுக்க நம்ம சிபாரிசு எதுக்குனு நினைச்சிக்கிட்டே, இன்னொரு ஓனருக்கு போன் போட்டேன்.  “யாரு  வந்தாலும் மேல அனுப்பிடறாங்க சார்... ஒரு அவசரக் கூட்டம் போட்டு விளக்கம் கொடுக்கலாமா?”ன்னு கேட்டேன்.  “ஞாயிறு மதியம் வச்சுக்கலாம்”னு அவரு சொன்னாரு. பேசி வச்சதுமே, ரெண்டு பொண்ணுங்க. ஆதரவற்றோர் இல்லத்துக்கு டொனேஷன்னு வந்து நின்னாங்க. “கீழ ஒருத்தர் தான், ‘செகரட்டரியைப் பாருங்க’ன்னு அனுப்பினாரு சார்”னாங்க, என்னால  முடிஞ்சத அவங்களுக்குக் குடுத்து அனுப்பிட்டு வீட்டுக்குள்ர வந்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in