பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

சீர்காழி

கடைவீதியில் இருவர்...
``எம் பையனுக்கு பதினாலு வயசாகுது... ஆளு வெடவெடனு முருங்கைக்காய் மாதிரி இருக்கான்... வேளா வேளைக்கு சரியா சாப்பிட மாட்டேங்கறான்... சதா மொபைல் போனையே நோண்டறான்... ஏதாவது வைட்டமின் டானிக் மெடிக்கல்ல வாங்கிக் கொடுங்கலாம்ங்களா சார்?''
``டானிக்கை விட ஒரு பெஸ்ட் ஐடியா சொல்றேன்... கையில வெச்சிருக்கற மொபைல் போனை மொதல்ல பிடுங்கிடுங்க... ஸ்கூலுக்கு அனுப்பறதுக்கு முந்தி தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வெச்சுடுங்க... ஆளு யானை கணக்கா மூளை ஷார்ப்பாகி, தொந்தியும் தொப்பையுமா திரும்பி உடம்பு தேறி வருவான்..!''
- சீர்காழி, வி.வெங்கட்

பாளையங்கோட்டை

 கடைவீதியில் இரு இளைஞர்கள்...
``மாப்ள... பொது இடங்களில் இருக்குற சார்ஜர்களில போனுக்கு சார்ஜ் ஏத்துனா ஹேக்கர்ஸ் நம்ம பேங்க் கணக்கில் இருந்து எல்லா பணத்தையும் சுருட்டுறதுக்கு வாய்ப்பு இருக்காம். அதுக்குப் பேரு ‘ஜூஸ் ஜாக்கிங்'காம். சும்மா கிடைக்குதேன்னு கண்ட இடத்துல எல்லாம் போனுக்கு சார்ஜ் ஏத்திட்டிருக்காதே!’’
``ஐ டோன்ட் கேர்!’’
``எல்லாம் தெரிஞ்சவன் அப்படினு திமிரா?’’
``எல்லாம் தெரிஞ்சவன் கிடையாதுடா... அக்கவுன்ட்ல எதுவும் இல்லாதாவன்!’’
- சூழவாய்க்கால், எ.முகமது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in