திக்.. திக்.. தீபாவளி பர்ச்சேஸ்!

திக்.. திக்.. தீபாவளி பர்ச்சேஸ்!

உத்ரா
uthraperumal@gmail.com

தீபாவளி, பொங்கல் வருதுன்னாலே நமக்கெல்லாம் நடுக்கம் வந்துரும். ஆபீஸ்ல குடுக்குற தீபாவளி அட்வான்ஸ் ஐயாயிரம் தான். அதையும் அடுத்த மாசத்துலருந்து புடிக்க ஆரம்பிச்சிருவாங்க. ஆனா, குடுத்த பணத்துக்கு மேல கூவுறதுக்கு வீட்டுல காத்திருப்பாங்க.
அவங்களுக்கு நம்ம அவஸ்தை எல்லாம் எங்க தெரியப் போகுது. 

“கையில காசு இல்லை”ன்னு சொன்னா, “அதுக்காக வருசத்துல ஒருநாள் வர்ற பண்டிகைய கொண்டாடாம இருக்க முடியுமா?”ம்பாங்க. இது மாதிரியான நேரங்கள்ல தான் வட்டிக்குப் பணம் குடுக்கிறவங்க நமக்கு குலகுருவா தெரிவாங்க.

சரி, நான் மேட்டருக்கு வர்றேன்... போன வாரம் வெள்ளிக்கிழமை வீட்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமேன்னு ஆபீஸுக்கு லீவு போட்டிருந்தேன். அது, கட்டுனவளுக்கு பொறுக்கல.  “ஏங்க... தீபாவளி வந்துருச்சு. ஒண்ணுமே சொல்லாம அமைதியா இருக்கீங்க?”ன்னு ஆரம்பிச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in