எனக்கொரு கப் காபி கிடைக்குமா?

எனக்கொரு கப் காபி கிடைக்குமா?

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

கிச்சன் பக்கம் நாலு தடவை பூனை நடை நடந்து எட்டிப் பாத்தா இன்னொரு டோஸ் காபிக்கு அலையறேன்னு எப்படித்தான் புரியுமோ... பாத்திரமெல்லாம் லகலகன்னு உருண்டுச்சு. “என்னம்மா... காபிப்பொடி தீர்ந்து போச்சா?”ன்னு அனுதாப அலை வீசிப் பார்த்தேன். “பால் சூடு ஆறிப் போச்சு... மறுபடி காய்ச்சணும்”ன்னு எதிர் சவுண்டு. சரி... நமக்கு நாமேன்னு பாலை அடுப்புல வச்சேன். அவங்க வெளிநடப்பு செஞ்சுட்டாங்க. டிவிய ஆன் பண்ணிட்டு ஹாய்யா உட்கார்ந்து பழைய பாட்டை ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
 அப்ப பார்த்து அலைபேசில நோட்டிஃபிகேஷன் சத்தம். ஏதோ முக்கிய செய்தின்னு ஓடிப் போய் எடுத்துக்கிட்டு வந்து, வாட்ஸ் - அப்ல வந்த மெசேஜைப் படிக்க ஆரம்பிச்சேன். லேசா பொசுங்கற வாசனை வந்துச்சு. பதறிப் போய் அடுப்பப் பார்த்தா மொத்தப் பாலும் பொங்கலாகி நாலு பக்கமும் வழிஞ்சு ஓடுது.

அவசர அவசரமா துடைச்சு தடயம் இல்லாம செஞ்சுரணும்னு பார்த்தேன். மோப்ப சக்தி வீட்டுக்காரிக்கு அதிகம்னு மறந்து போச்சு. ஹால்லேர்ந்து அவங்க குரல் கேட்டுச்சு. “வீட்டுல இருந்த பால் அவ்ளோதான். பொறுமையும் இல்ல... கவனமும் இல்ல உங்ககிட்ட. இன்னிக்கு போட வேண்டிய பாக்கெட் பால் வந்துருச்சான்னு பாருங்க. வாசல் கதவுல தொங்குற பையில போட்டுருப்பார். அந்த பால் பாக்கெட்டை எடுத்துகிட்டு வந்தா காபி”ன்னு கண்டிஷன் போட்டாங்க.
அதக் கேட்டு ஒரு பக்கம் பத்திக்கிட்டு வந்துச்சு. கூடவே இன்னொரு யோசனையும். ஹப்பா... நல்ல மூட்லதான் இருக்காங்க... பொங்க வெச்சதுக்கு சத்தம் போடலன்னு மனசை தேத்திக்கிட்டு வாசப் பக்கம் போனேன். கதவுல தொங்குன பையில கைய விட்டா ஒரே ஷாக்.

 உள்ள எதுவும் இல்ல. “பால்காரர் இன்னமும் வரல போலிருக்கேம்மா”ன்னு ராகம் பாடுனேன். “வரலியா... மணி எட்டாச்சு... ஏழு மணிக்குள்ள போட்டுருவாரே. அவருக்கு போன் அடிங்க.” போனா... என்ன நம்பர்னு நான் முழிக்கிறத பார்த்துட்டு பட்டுனு பதில் வந்துச்சு. “என்னோட போன்ல, ‘மில்க்’னு சேவ் பண்ணியிருப்பேன் பாருங்க”ன்னாங்க. “அவங்க போன் எங்கே இருக்குன்னு தெரியல. கேட்டா அதுக்கு என்ன சொல்வாங்களோன்னுட்டு என் போன்லருந்து ஒரு கால் போட்டு அவங்க போன் சிணுங்குற இடத்தைக் கண்டுபிடிச்சேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in