பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

சீர்காழி

மளிகைக்கடையில் கஸ்டமரும் கடைக்காரரும்...
``ஏங்க இந்த மாவு பாக்கெட்ல எத்தனை தோசை ஊத்தலாம்..?''
``கையில ஆண்ட்ராய்டு மொபைல் வெச்சிருக்கீங்களா..?
``இருக்கு சார்...''
``கூகுள்ல போய் சர்ச் பண்ணிப் பாருங்க தம்பி... எத்தனை தோசை ஊத்தலாம், எத்தனை இட்லி வரும் அதுக்கு ‘சைட் டிஷ்' சாம்பார், சட்னி, பொடி எது சாப்பிட காம்பினேஷன் செட்டாகும்னு விரிவா விளக்கமா போட்டிருப்பாங்க. முப்பது ரூபாய்க்கு மாவு பாக்கெட்ட வாங்கிட்டு நீ கேக்குற முந்நூறு கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ற அளவுக்கு எனக்குப் பொறுமை கிடையாது... அடுத்து வர்ற கஸ்டமரைப் பார்க்கணும்ப்பா..!''
(கடையை விட்டுப் பேசாமல் நகர்கிறார் அந்த இளைஞர்)
- சீர்காழி வி.வெங்கட்

திருமயம்

கடைவீதியில் இரு நண்பர்கள்...
``அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்றதெல்லாம் உண்மையா மச்சான்?''
``ஆமா, அதுல என்ன சந்தேகம்?''
``அப்ப என் முகத்தைப் பார்த்து விசேஷத்தை சொல்லு...''
``உன் முகத்தைப் பார்த்தா, மனைவியை நீ நேத்தே ஊருக்கு அனுப்பியிருக்கணும் மாமா. அதுதான் உன் முகத்துல சந்தோசமா தெரியுது..."
``இல்ல மச்சான். அவ எங்கே ஊருக்கு போறேங்கறா?''
``இல்லையே... எப்பவும் கடுகடுன்னு பிரஷரா இருக்கற நீ, இப்ப ரொம்ப கூலா அமைதியா, ஹாப்பியா, ஃப்ரெஷ்ஷா இருக்கியே... வீட்டுக்கு கொளுந்தியா வந்திருக்காளா?''
``ஆமா மச்சான். சரியா கண்டுபிடிச்சிட்டியே...''
(இருவரும் வெடிச்சிரிப்புடன் நகர்கிறார்கள்)
- காரைக்குடி, பெ.பாண்டியன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in