பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சை நிறமே பச்சை நிறமே

ரிஷபன்

சென்னை மாதிரி மெட்ரோ சிட்டியில இந்த அனுபவம் இருக்கான்னு தெரியல. ஆனா, எங்கள மாதிரி ரெண்டுங்கெட்டான் ஊருல இருக்கவங்களுக்கு இது அடிக்கடி நடக்கும். என்னன்னு யோசிக்கிறீங்களா... நல்லா அசந்து தூங்கற மதிய நேரத்துல காலிங் பெல் அடிக்கும். எழுந்து போய்க் கதவைத் தொறந்தா... வயசானஒரு அம்மா கூடையோட நிக்கும். நம்மளப் பாத்ததும் சிக்கினடா மகனேன்ற மாதிரி ஒரு சிரிப்பு. சொந்தக்காரங்கூட அம்புட்டுப்பாசமா சிரிக்க மாட்டான்.

அப்படித்தான் ஒரு நாளு எங்க வீட்டம்மா இல்லாத நேரத்துல நான் வசமா சிக்கிக்கிட்டேன். “யாரும்மா நீயி...”ன்னு கேட்கப் போக, “அவுங்க இல்லியா..?”ன்னு ரொம்ப உரிமையா கேட்டுச்சு காலிங்பெல்ல அழுத்துன அந்தம்மா. “இல்லியே...”ன்னு இழுத்ததும், “இந்தா இத உள்ள எடுத்து வையி”ன்னு அதட்டலா சொல்லி பச்சைக் கலர் அடிச்சு அப்பதான் எஃப்சிக்கு போயிட்டு வந்த பஸ் மாதிரி ஒரு சீப்பு வாழக்காயை நீட்டுச்சு. “அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். பச்சை நாடன்... கிராமத்துப் பழம். தேனா இனிக்கும்”னு அம்புட்டுத் தேனா பேசுச்சு அந்தத் தாயி.

 ‘‘ இத வாங்காம அனுப்பிட்டா அவங்க வந்து சத்தம் போடுவாங்களோ... “அதான் அவ்ளோ சொல்லிச்சுல்ல அந்தம்மா... அப்புறமும் வாங்காம விட்டீங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம்?”ன்னு அவங்க சொல்லுவாங்க. உடனே என்னோட வாரிசு, “அவ்ளோதாம்மா உம்மேல அப்பாக்கு அக்கறை”ன்னு நல்லா ஸ்க்ரூ போடும். எதுக்கு இந்த வம்பு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in