சினிமாவுக்குப் போறேன் சித்தப்பு

சினிமாவுக்குப் போறேன் சித்தப்பு

என்.சுவாமிநாதன்

என்னதான் பறந்து பறந்து கட்டுரைகளை அனுப்பினாலும் வாரா வாரம் காமதேனுவுக்கு சினிமா விமர்சனம் அனுப்புறதுக்காக வெள்ளிக்கிழமை தவறாம சினிமாவுக்கும் போயாகணும். பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கடைசி வரைக்கும் உக்காந்து படத்த ரசிச்சு(!) ஆகணும். பெரும்பாலும் இந்த மாதிரி நேரங்கள்லதான் தொயரங்களும் ஒயரத்துல நின்னு எட்டிப் பாக்கும்!

போன வாரத்துக்கு முந்துன வாரம் நிறைய படங்கள் ரிலீஸ். எனக்கு ‘நூறு’ (பயந்துடாதீங்க... ஒரு படம் தான்; படத்தோட பேருதான் ‘நூறு’) பார்க்கணும். அன்னிக்குன்னு வீட்டம்மா சொந்தத்துல ஒரு கல்யாணம். பையனையும், அவங்களையும் டூ வீலர்ல கல்யாண மண்டபத்துல கொண்டு விட்டுட்டு கொஞ்ச நேரம் அங்க இருந்தேன். பத்தரை மணிக்கு தாலிகட்டு முடிஞ்சது. உடனே வீட்டம்மாவே, “ஏங்க உங்களுக்கு 11 மணிக்கு படத்துக்குப் போகணும்ல... சீக்கிரம் கெளம்புங்க”ன்னு தட்டிவிட்டாங்க. நானும் “ஓகே ஓகே... படத்துக்குப் போயிட்டு வரும்போது சாப்பிட வாரேம்மா... அப்போ உங்களயும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுறேன்”னு சொல்லிட்டு கிளம்புனேன். வாசல தாண்டுறப்ப, வீட்டம்மா சொந்தத்துல ஒருத்தரு, “என்ன மருமகனே... சாப்பிடாம போறீங்க?”ன்னு பிரேக் போட்டாரு. ஏற்கெனவே நேரம் ஆயிட்டு. இருந்தாலும் சம்பந்தப்புரத்து ஆளாச்சே... அதனால பொறுமையா நின்னு அவருக்கு ஒரு வெளக்கத்தப் போட்டுட்டு வண்டிய முறுக்குனேன்!

தியேட்டருக்குள்ள போறப்பயே அம்பது, அறுபது பைக் நின்னுச்சு. எல்லாருமே பத்து ரூபாய குடுத்து பார்க்கிங் டோக்கன் வாங்கிட்டு இருந்தாங்க. என்னோட வண்டிய பார்த்ததுமே பார்க்கிங்ல இருந்த தாத்தா ஓடி வந்தாரு. “விமர்சனம் எழுதவர்ற தம்பிதானே நீ... படம் இன்னிக்கு ரிலீஸ் போல தெரியல. கொஞ்சம் நேரம் பார்த்துட்டு டோக்கன் காசை திருப்பிக் குடுத்துருவோம். உங்களுக்கும் டோக்கன போட்டுத் திருப்பி அனுப்புனா அது அவ்வளவு நல்லா இருக்காது. அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”ன்னாரு. யப்பா… தியேட்டர்லகூட நம்ம கெத்தாத்தான் இருக்கோம்னு மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்குறப்பயே போன் அலறுச்சு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in