படுக்க வெச்சுட்டியே பரட்ட!

படுக்க வெச்சுட்டியே பரட்ட!

ரிஷபன்

என்னை மாதிரி மூணெழுத்துக்கு மொடக்குன்னு மயங்குற ஆளா நீங்க..? அட, அதாங்க... யாராச்சும் உதவின்னு கேட்டுட்டா, நம்ம வேலையையும் விட்டுட்டு ஓடிப்போய் உதவுற டைப்பா... அப்ப கண்டிப்பா இது உங்களுக்கும் சேர்த்துத்தான்.

நாங்க ஃபிளாட்ல இருக்கோம்னு ஏற்கெனவே சொல்லிருக்கேன். எங்க எதிர் வீட்டுக்கு ஒரு ஃபேமிலி குடி வந்துச்சு. நாமதான் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டோமே! ஹிஹின்னு சிரிச்சு வெச்சுட்டு, “என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க, தயங்காம”ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன். சொல்லிட்டு வீட்டுக்கு உள்ளார வந்தா வீட்டம்மா பிலுபிலுன்னு புடிச்சுக்கிட்டா. “அவிங்களா வந்து ஏதாச்சும் கேட்டா, செஞ்சா பத்தாதா? ஏற்கெனவே ஒருத்தரோட வீட்டுக்கு வாடகைக்கு ஆள்பிடிச்சுக் குடுக்கப் போய் அவஸ்தைப் பட்டது போதாதா. ஏன் இப்டி நீங்களே வலியப் போயி வம்புக்கு வெத்தல பாக்கு வைக்கிறீங்க?”னு வீட்டுக்குள்ள விட்டு ரவுண்டு (வார்த்தையில தான்!) கட்டிட்டா. பதிலுக்கு நானும் வீராப்பா சவுண்டு விட்டேன். “நமக்கு ஒண்ணுனா உதவுறதுக்கு மொதல்ல ஓடி வர்றது அக்கம் பக்கத்து ஆளுங்கதான். சொந்த பந்தமெல்லாம் அப்புறம்தான். அக்கம் பக்கத்துல சுமூகமா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா? ஒரு பேச்சுக்கு நான் சொன்னேன். அதுக்காக அவரு இப்பயேவா வந்து நிக்கப் போறாரு”னு நான் சொல்லிக்கிட்டு இருக்கப்பயே யாரோ கதவ தட்டுறாப்ல சத்தம்!

கதவைத் திறந்து பார்த்தா, எதிர் வீட்டு அண்ணன். “கோக்காலி இருக்கா”ன்னு வந்து நிக்கிறார். அவரு கேட்டது என் காதுல ‘நாக்காலி’னு விழுந்துச்சு. தெறந்து கெடந்த அவரோட வீட்டு ஹாலை எட்டிப் பார்த்தேன். யாராச்சும் விருந்தாடி வந்து உட்கார வைக்க பத்தாம போச்சா. “எங்க வீட்டுல இருக்கதே ரெண்டு நாக்காலிதான்... இதா பாருங்க”ன்னு அப்பாவித்தனமா எங்க வீட்டுல கெடந்த இருக்கைகள காட்டுனேன். அதுக்கு அவரு, என் காதுக்குப் பக்கத்துல வந்து “கோக்காலி... கோக்காலி...”னு திருத்தமா கேட்டாரு. அதுக்குள்ள எங்க வீட்டுக்குள்ளருந்து என் மனைவி சைகையில ஏதோ சொல்லி எனக்குப் புரியவைக்கப் பார்த்திருக்கா. “கொஞ்சம் இரு... இந்தக் கோக்காலிய எடுத்துக் குடுத்துட்டு வந்துடுறேன்”னு சொல்லி கஷ்டப்பட்டு எங்க வீட்டுக் கோக்காலிய தூக்கி அவருக்கு குடுத்து அனுப்பிட்டு வீட்டுக்குள்ள போனேன். அப்பத்தான் தெரிஞ்சுது, மனைவி சைகை காட்டுனதே கோக்காலிய குடுக்க வேண்டாம்னு சொல்றதுக்குதான்னு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in