காரு வாங்கலியோ காரு!

காரு வாங்கலியோ காரு!

உத்ரா

 எ னக்கும் என் பொண்டாட்டிக்கும் சாதாரணமா சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கிறப்பத்தான் சண்டை வாங்கிக்கும். அன்னிக்கும் அப்படித்தான். ஏதோ பேச்சுவர... “என்னமோ கார்லயே பொறந்து கார்லயே வளர்ந்த மாதிரி காரு மோகம் புடிச்சி அலையறே”ன்னு ஆரம்பிச்சா. “எவனெவனோ கார் வெச்சிருக்கான். நான் வாங்கக்கூடாதா... நம்மளும் கொஞ்சம் முன்னேறுனா தப்பா?”னு நானும் தைரியமா கொரல ஒசத்துனேன்.           

அதுக்கு என்னைய புழுவப் பார்க்கிறாப்ல பார்த்தவ, “யாரு... நீங்கதானே! கடன்தான் முன்னேறிக்கிட்டே இருக்குது. பேங்குல வச்ச நகைய இன்னும் மூட்டப் பாடில்லே. காரு வாங்குதாம்... காரு!”ன்னா. அவ சொன்னத பெருசா காதுல போட்டுக்காம உயிர் நண்பேங்க சில பேருக்கிட்ட கார் வாங்குறத பத்தி ஆலோசனை கேட்டேன்.        

அவனுக எம் பொண்டாட்டிக்கு மேல பேசுனானுக.   “ஒனக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேல... நம்ம ஊரு டிராஃபிக்க பாத்தில்ல... நீ பாட்டுக்கு எவனையாச்சும் ஏடாகூடமா இடிச்சுப் போட்டியன்னா வில்லங்கம்தான். போன்ல கூப்புட்டா வாடகைக்கு வகைவகையா காரு வரும். அழகா அதுல போயிட்டு வர வேண்டியதுதானே”னு சொன்னானுவ.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in