மொய்யெழுதப் போறேன்..!

மொய்யெழுதப் போறேன்..!

உத்ரா

முப்பது வருசத்துக்கு முந்தியெல்லாம் நண்பர்கள் வட்டாரத்துல யாரு வீட்ல கல்யாணம்னாலும் நாங்க எல்லாம் ‘ஊருல கல்யாணம்... மாருல சந்தனம்’கிற கதையா மொத ஆளா போய் நிப்போம். கல்யாண வீட்டுக்கு மாவு அரைச்சு தூக்கிட்டு வர்றதுலருந்து கல்யாணப் பொண்ணுக்கு மருதாணி பறிச்சுக் குடுக்கிற வரைக்கும் எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்வோம்.

கல்யாணத்தன்னைக்கி என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே அங்க இங்கன்னு பரபரப்பா வேலை செஞ்சுக்கிட்டே அதோட அதா ஃபிகர்களுக்கு பிராக்கெட் போட்டுட்டு இருப்பானுங்க. ஆனா, என்னைய மட்டும் மொய் எழுதுற பொறுப்ப குடுத்துப் பழி வாங்கிருவானுங்க. ஒவ்வொரு கல்யாணத்துலயும் இதுதான் நடக்கும்.

எல்லாம்... மொய் எழுதுறது ஏதோ மரியாதைக்குரிய வேலைன்னு நான் நெனச்சதால வந்த வினை! எந்தக் கல்யாணத்துக்குப் போனாலும் ஒரு குயர் நோட்டையும் ஊதா பேனாவையும் குடுத்து உக்கார வெச்சிருவாங்க. எப்படித்தான் கண்ணுல வெளக்கெண்ணெயை ஊத்திக்கிட்டு எழுதிக் கணக்குப் பார்த்தாலும் கணக்கு முடிக்கையில அஞ்சு பத்து அவுட் அடிக்கும். “அத விடுப்பா... எங்க போகுது”னு கல்யாண வீட்டுக்காரங்க அத பெருந்தன்மையா மன்னிச்சு விட்டுருவாங்க.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in