பேசிக்கிட்டாங்க..!

பேசிக்கிட்டாங்க..!

சேலம்

புதிய பேருந்து நிலைய கழிப்பறை வாசலில் துப்புரவுப் பணியாளரும் கழிப்பறைக்குச் சென்று வந்தவரும்...
``சார்... ஒரு ரூபா ரெண்டு ரூபா கொடுத்துட்டுப் போ சார்...''
``காசு கொடுத்துதான உள்ள போறோம்... அப்புறமென்ன காசு?''
``கக்கூசுக்குப் போறதுக்கு மட்டும்தான் சார் அந்தக் காசு...''
``அதுக்கு மட்டும்தான போறோம்... அதுவும் ரெண்டு ரூபாவுக்கு அஞ்சு ரூபா கொடுத்து...''
``குடிச்சுட்டுப் பாட்டிலெல்லாம் போட்டுட்டு போறியே... அத யாரு எடுக்குறதாம்?''
``அத போட்டவங்கிட்ட கேளு... எங்கிட்ட கேட்கிற...''
``அப்ப நா ஒவ்வொரு கக்கூஸையும் தொறந்து தொறந்துதான் பாக்கணும்..!''
``தொறந்து பாரு... இல்ல தொறக்காம பாரு... இப்ப எனக்கு வழிய விடு...''
(கோபமாக வெளியேறுகிறார்)
- வேம்பார், ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

நாகர்கோவில்

சலூன் கடை ஒன்றில் கடைக்காரரும் வாடிக்கையாளரும்...
``ஏம்பா...போன தடவை அடிச்ச ‘டை ‘ஒரு வாரத்துக்குக் கூட வரலையேப்பா..? பத்து ருபாய் ‘டை'யை, அடிச்சிட்டு, எண்பது ருபாய் வேற வாங்கிப்புட்டே...''
``தலைக்கு அடிக்கற ‘டை' க்கு எல்லாம் ‘லைஃப் டைம் கியாரன்டி' தர முடியாதுங்க... வெள்ள முடி தெரிஞ்சா... திரும்ப வந்து ‘டை' அடிச்சிக்க வேண்டியதுதான்...''
``சும்மா சும்மா உன் கடைக்கு வந்து, எண்பது ருபாய் அழுது ‘டை' அடிக்கச் சொல்றியா ..?ஏதாச்சும் ஒரு மாசம் தாக்கு பிடிக்கறமாதிரி ‘டை’ இருந்தால் அடிச்சு விடேன்...''
``ஒரு மாதம் தாக்குப் பிடிக்கற மாதிரினா...நீங்களே எங்காச்சும் போயி, ஓட்டுக்கு விரல்ல தடவுற மை கொண்டாங்க. அடிச்சு விடறேன்..?''
(விக்கிப் போய் நிற்கிறார் வாடிக்கையாளர்)
பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in