சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்(கோப்புப் படம்).

உருவானது புயல்: தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் எனவும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு அந்தமானிலும், அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளிலும் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தெற்கு அந்தமான் பகுதியிலேயே இப்போதும் இருக்கிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெறக் கூடும். இது இன்றுகாலை புயலாக வலுப்பெற்று தீவிரப் புயலாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து 10-ம் தேதி, வட ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு மத்திய மேற்கு வங்கக் கடல்பகுதியை நோக்கி நகரக்கூடும்.

இதனால் தென்கிழக்கு மத்திய வங்ககடல் பகுதியில் 70 முதல் 80 கிலோமீட்டர் காற்று இன்று வீசும். இதுவே இன்று மாலை 110 கிலோமீட்டர் வேகத்தை நெருங்கும். இதனால் வங்கக் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குக் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதேபோல் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.”எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in