மக்களைப் பேசவைத்த முன்னோடிகள்!

மக்களைப் பேசவைத்த முன்னோடிகள்!

40 மற்றும் 50-களில் பக்திப்படங்களின் காலமே நீடித்தது. அந்தச் சமயத்தில், தரமான சமூகப் படைப்புகளை மட்டுமே தரவேண்டும் என்று உறுதியாக நின்ற இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு. இவர்கள் இயக்கிய ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் பேசப்படும் படங்களாக இருந்தன.

லேப், எடிட்டிங் என இரு துறைகளில் திறமை பதித்த இவர்கள் இருவரும் வாய்ச்சண்டை ஒன்றில்தான் முதலில் சந்தித்துக் கொண்டார்கள். அதன்பிறகு அந்தச் சந்திப்பே ஆழமான நட்பாக மலர்ந்தது. இணை பிரியாமல் 40 ஆண்டுகளில் 56 படங்களை இயக்கிய சாதனை இவர்களுடையது. தமிழில் 41, இந்தியில் 11, தெலுங்கில் 3, கன்னடத்தில் 1 எனத் தென்னக மொழிகளில் திகட்டாமல் இயக்கிக் குவித்த இவர்கள், கேமராவை ஸ்டுடியோவுக்கு வெளியிலும் நகர்த்திச் சென்று வெளிப்புறப் படப்பிடிப்பிலும் தனித்துவம் படைத்தார்கள்.

அறிஞர் அண்ணா கதை வசனத்தில் ‘நல்லதம்பி’, கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில், ‘பராசக்தி’, திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் ‘ரத்தக்கண்ணீர்’ தொடங்கி ‘ குலதெய்வம்’, ‘தெய்வப்பிறவி’, ‘குழந்தையும் தெய்வமும்’ ‘சர்வர் சுந்தரம்’, ‘அன்னை’ உயர்ந்த மனிதன்’, பெற்றால்தான் பிள்ளையா?’ எனப் பல படங்களை வாழ்வின் சிறந்த பாடங்களாகக் கொடுத்தவர்கள்.

நட்சத்திரங்களின் மகாநதி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in