சைனிக் பள்ளியில் சேர விருப்பமா?: நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளி
உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளி

உடுமலை அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் சேர்வதற்காக அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு படைகளில் இணைய விரும்பும் மாணவர்களைப் பள்ளி காலத்திலிருந்தே தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் வகையில் நாடு முழுவதும் சைனிக் பள்ளிகள் கடந்த 1961-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது 33 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி நகரில் சைனிக் பள்ளி செயல்படுகிறது. இங்கு 6வது மற்றும் 9வது வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு வருகிற ஜனவரி 21-ம் தேதி நடைபெறுகிறது.

சைனிக் பள்ளியில் ராணுவ பயிற்சி (கோப்பு படம்)
சைனிக் பள்ளியில் ராணுவ பயிற்சி (கோப்பு படம்)

இந்த தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://aissee.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற டிசம்பர் 16-ம் தேதி வரை இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 6-ம் வகுப்பில் சேர மாணவ, மாணவிகளுக்கு 31.03.2024க்குள் 10 முதல் 12 வயது வரை இருக்க வேண்டும். இதே போல் 9ம் வகுப்பில் சேர மாணவ மாணவிகளுக்கு 31.03.2024-க்குள் 13 முதல் 15 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சைனிக் பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
சைனிக் பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தேர்வு குறித்த முழுமையான தகவல்களுக்கு https://exams.nta.nic.in/AISSEE/ என்ற இணையத்தை பார்க்கலாம். இங்கு பயிலும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், இந்திய கப்பற்படை ஆகியவற்றில் பணியாற்ற முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்!  முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in