அதிரடி: தமிழ்நாட்டில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு இன்று (நவ. 6) உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனைச் சார்ந்த பணியிடங்களில் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், பணியிட மாற்றம் தொடர்பாக தமிழக அரசு இன்று (நவ. 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, திருச்சி, திருவள்ளூர், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவர்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in