‘சிவில் நீதிபதி தேர்வு குளறுபடி... பின்னணி என்ன?’ -டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம்!

தேர்வு
தேர்வு

இன்று நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் நேரிட்டதாக சொல்லப்படும் ,குளறுபடியின் பின்னணி குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் நெடுக இன்று சிவில் நீதிபதிக்கான தேர்வு நடைபெற்றது. இதில் வடசென்னையின் தேர்வு மையம் ஒன்றில் பெருத்த குழப்பம் விளைந்தது. அந்த மையத்தில் மதியம் நடைபெறவிருந்த தேர்வுக்கான வினாத்தாள் காலை அமர்வில் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் தேர்வு எழுத அமர்ந்திருந்தோர் குழப்பத்துக்கு ஆளானார்கள். மேலும் மதியம் தேர்வெழுத காத்திருந்தோரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

தேர்வு
தேர்வு

இதனையொட்டி, சிவில் நீதிபதி தேர்வுகளை செயல்படுத்திய டிஎன்பிஎஸ்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உடனே அது குறித்து டிஎன்பிஎஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “சிவில் நீதிபதிக்கான தேர்வை நடத்துவது சென்னை உயர் நீதிமன்றம். அவர்கள் தயார் செய்து வழங்கிய வினாத்தாள்களையே நாங்கள் வழங்கினோம். இதில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தவறோ, குழப்பமோ இல்லை’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in