நாளை விடுமுறை கிடையாது... ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித்துறை உத்தரவு

நாளை விடுமுறை கிடையாது... ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித்துறை உத்தரவு

விஜயதசமி தினமான நாளைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அரசு பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக இன்று கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர். விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாள் என்பதால் ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என்றும் எல்கேஜி யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in