என்ஐடி சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்பதிவு இன்றுடன் முடிவடைகிறது.
பொறியியல் உயர்கல்வியில் சேர விருப்பமுள்ள ஆனால் வழக்கமான பொறியியல் கல்லூரிகளுக்கு மாற்றாக, தலைசிறந்த நிறுவனங்களில் அவற்றை பயில விரும்புவோருக்கான முதன்மை உயர்கல்வி நிறுவனங்களாக என்ஐடி மற்றும் ஐஐஐடி ஆகியவை விளங்குகின்றன.
இவற்றில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு வழி செய்கிறது. இந்த ஜேஇஇ மெயின்- இரண்டாம் அமர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு நடைமுறைகள் மார்ச் 2 உடன் நிறைவடைகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதிவினை மேற்கொள்ளலாம். விண்ணப்பதிவினை இன்றிரவு 9 மணி வரையிலும், விண்ணப்ப கட்டணத்தை இரவு 11.50 வரை செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்களுக்கு மார்ச் மூன்றாவது வாரத்தில் தேர்வு மையத்துக்கான விவரங்கள் அறிவிக்கப்படும். தேர்வு நாளுக்கு 3 தினங்கள் முன்பாக அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம். ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15, 2024 இடையே தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 25, 2024 அன்று அறிவிக்கப்பட இருக்கின்றன.
ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு jeemain.nta.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை நாட வேண்டும். முகப்பு பக்கத்தில் ’ஜேஇஇ மெயின் சீஸன் 2’ என்பதை சொடுக்கி விண்ணப்ப பதிவினை தொடங்கலாம். விண்ணப்ப படிவத்தில் கோரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் ஆன்லைனில் நிரப்பி, உரிய ஆவணங்களை உடன் அப்லோட் செய்ய வேண்டும். ஆன்லைன் பரிவத்தனை மூலமே தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்ப படிவத்தை சப்மிட் செய்த கையோடு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
ஜேஇஇ முதன்மைத் தேர்வானது தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) மற்றும் மத்திய நிதியுதவி பெறும் பிற தொழில்நுட்ப நிறுவனம் (சிஎஃப்டிஐ) போன்ற மதிப்புமிகு நிறுவனங்களின் சேர்க்கைக்கான நுழைவு வாயிலாகும்.
பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெறுவது விண்ணப்பதாரர்களின் அடிப்படைத் தகுதியில் அடங்கும். இந்த தகுதி மதிபெண் பட்டியல் இனத்தோர் மற்றும் பழங்குடியினருக்கு(எஸ்சி/எஸ்டி) 65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!
கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!
4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!