மாணவர்கள் கவனத்துக்கு... ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

மாணவர்கள் கவனத்துக்கு... ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது, ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024-25 கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும்12 லட்சத்து 25,529 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு, ஏப்ரல் 4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக மார்ச் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜேஇஇ தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in