பொது காலாண்டுத் தேர்வு கிடையாது: பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரிக்க திடீர் அறிவுறுத்தல்

பொது காலாண்டுத் தேர்வு கிடையாது: பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரிக்க திடீர் அறிவுறுத்தல்

காலாண்டுத் தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே  முடிவு செய்து கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கரோனா காரணமாகக் கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் வழக்கத்தை விடத் தாமதமானது. அதே போலப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளும் காலதாமதமாகவே திறக்கப்பட்டன. இந்நிலையில் காலாண்டு தேர்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது.

அதன்படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் காலாண்டுத் தேர்வை முடிக்கும் வகையில் தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வைப்  பொருத்தவரை பள்ளி அளவில்  வினாத்தாள்களைத் தயாரித்துத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது வினாத்தாள் வெளியாகும் நிலையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே  முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in