வெளிநாட்டு மாணவர்கள் படிக்க விரும்பும் இந்திய நகரங்கள்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

வெளிநாட்டு மாணவர்கள் படிக்க விரும்பும் இந்திய நகரங்கள்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஜூன் 29 அன்று வெளியிடப்பட்ட QS சிறந்த மாணவர் நகரங்களின் தரவரிசையின்படி, இந்தியாவின் மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி ஆகியவை சர்வதேச மாணவர்களுக்கான முதல் 140 நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

வெளிநாட்டு மாணவர்கள் படிக்க விரும்பும் உலக நகரங்களின் க்யூஎஸ் பட்டியலில், இந்தியாவின் மும்பை நகரம் 103 வது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூரு 114வது இடத்தில் உள்ளது. மேலும் பட்டியலில் இந்த ஆண்டு சென்னை (125வது இடம்) மற்றும் டெல்லி (129 வது இடம்) ஆகிய இரண்டு நகரங்கள் புதிதாக இணைந்துள்ளது. இதனால் இப்பட்டியலில் இணைந்துள்ள நகரங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. 2018-19 ம் ஆண்டு உயர்கல்விக்கான அகில இந்திய ஆய்வின்படி, இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 47,427 மட்டுமே. ஆனால், 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் 2,00,000 சர்வதேச மாணவர்களை ஈர்க்க இந்தியா முயல்கிறது.

QS சிறந்த மாணவர் நகரங்களின் தரவரிசை என்பது மாணவர்களுக்கான கல்வித்தரம், செலவுகள், வாழ்க்கைத் தரம், பல்கலைக்கழகத்தின் தரம் மற்றும் முந்தைய மாணவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த தரவரிசையில் பிரிட்டனை சேர்ந்த லண்டன் நகரம் முதல் இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் சியோல் நகரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஆசிய நகரங்களில் சியோல் முதலிடத்திலும், டோக்கியோ, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஒசாகா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in