மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது!

பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வு அட்டவணையை  இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை முன் கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தீபாவளி விடுமுறை முடிந்ததும், பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ஜே.இ.இ., கிளாட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பாதிக்காத வகையில், மூன்று விதமான பொதுத் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்றும், ஓரிரு நாட்களில் அட்டவணை வெளியிடப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

பொதுத் தேர்வு
பொதுத் தேர்வு

அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு குறித்த திட்டமிடலை முன்கூட்டியே சரியாக தயார் செய்து கொள்ள முடியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in