தமிழக அரசுக்கு வைரமுத்து பாராட்டு - எதற்காக தெரியுமா?

வைரமுத்து
வைரமுத்துhindu கோப்பு படம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை தொடங்க 5 கோடி ரூபாய் நிதி வழங்கியிருக்கும் தமிழக அரசை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) இந்திய மொழிகள் மையம் தமிழ்ப்பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப்பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகிறது.

தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக செயல்பட உள்ளது. இதற்கென ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வடஇந்தியாவில் தொடங்கப்படும் முதல் தமிழ்த் துறையாகவும், தமிழாய்வுகள் அதிக அளவில் நடைபெற்று உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் என தமிழார்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு நிதி ஒதுக்கியுள்ள தமிழக அரசுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி கவிஞர் வைரமுத்து தனது சார்பில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

"டெல்லி ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகத்தில்
தமிழ் இலக்கியவியல்
தனித்துறை தொடங்க
5 கோடி ரூபாய் நிதி வழங்கியிருக்கும்
தமிழக அரசைப் பாராட்டுகிறேன்
முதலமைச்சரின் செந்தமிழ்ச் செயலால் அறிவுலகம் பெருமையுறுகிறது
இந்தியத் தலைநகரில் தமிழுக்குத் தனி அடையாளம் காணும் முதலமைச்சரை வாழ்த்துகிறேன்" என்று வைரமுத்து தமிழக அரசையும், முதல்வரையும் பாராட்டியுள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in