பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பிளஸ் 2
துணைத்தேர்வு  விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல்  இன்று வெளியிடப்படுகிறது. அதனை இன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அதனை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,  பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 10 காலை 11 மணி முதல்  12 ம்  தேதி மாலை ஐந்து மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுமதிப்பீட்டுக்கு ஒவ்வொரு  பாடத்துக்கும்  கட்டணமாக 505 ரூபாயும், மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாய் மற்றும் ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in