44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை... துணைவேந்தர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அண்ணா பல்கலை கழகம்
அண்ணா பல்கலை கழகம்

தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும் வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார். 'தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான  கவுன்சிலிங்கில்  44 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.  35 கல்லூரியில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்க நடந்துள்ளது. ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம்.

வேல்ராஜ்
வேல்ராஜ்

தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில்  சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும்' என்று வேல்ராஜ் கூறியுள்ளார்

பொறியியல் படிப்புக்கு  மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக காரணம் கூறப்படுகிறது.  இன்னொரு பக்கம் கல்லூரி என்ற பெயரில் எந்த விதமான வசதியும் இல்லாமல் வெறுமனே கட்டிடங்களையும் வைத்திருக்கும்  கல்லூரிகளில் தான் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in