மீண்டும் பரவும் கரோனா: பள்ளிகள் திறப்பில் மாற்றமா? அமைச்சர் பதில்

மீண்டும் பரவும் கரோனா: பள்ளிகள் திறப்பில் மாற்றமா? அமைச்சர் பதில்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கிவரும் நிலையில் பள்ளிகள் திறப்பு தேதியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி காட்டூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழகத்தில் 1 முதல் 10-ம் வரையிலான வகுப்புகள் வரும் 13-ம் தேதி திறக்கப்படும். இப்போதைக்குப் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோன்று 20-ம் தேதி 12-ம் வகுப்பு, 27-ம் தேதி 11-ம் வகுப்புகள் திறக்கப்படும். அதிலும் எந்த மாற்றமும் இல்லை. கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில் இதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு வழிகாட்டுதல் வந்தால் அதைப் பின்பற்றுவோம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in