அதிர்ச்சி... இசை ஆசிரியர் தாக்கி உயிருக்குப் போராடும் மாணவன்!

அனுஜ் சுக்லா
அனுஜ் சுக்லா

இசை ஆசிரியர் தாக்கியதில் 13 வயது மாணவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி
பள்ளி

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ரேவா மாவட்டத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இசை ஆசிரியராக ரிஷப் பாண்டே பணியாற்றுகிறார். அவரிடம் அனுஜ் சுக்லா(13) என்ற மாணவர் இசை கற்று வந்தார்.

இந்த நிலையில் அனுஜை ஆசிரியர் ரிஷப் பாண்டே அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அனுஜ் கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அனுஜ் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் அனுஜ் முகம் பெரிதாக வீங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது ஆசிரியர் தாக்கியதில், அனுஜ் சுக்லாவிற்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் உ யிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அனுஜின் உறவினர்கள் கூறுகையில், " ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த அனுஜ், ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.கடந்த நான்கு நாட்களாக நாக்பூரில் உள்ள நியோரன் மருத்துமனையில் வென்டிலேட்டரில் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். அறுவை சிகிச்சை நடைபெறு வருகிறது" என்றனர்.

இச்சம்பவம் குறித்து ரேவா கூடுதல் எஸ்.பி அனில் சோன்கர் கூறுகையில், " செப்டம்பர் 11-ம் தேதி, அனுஜ் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், மாணவனை தாக்கிய ஆசிரியர் கையில் ருத்ராட்சம் அணிந்திருந்துள்ளார். இதனால் மாணவனுக்கு கடுமையான முறையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் மீது 308, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

இசை ஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது மத்தியப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in